பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானுக்கு புதிய அமெரிக்க தூதர்கள்: ஒபாமா நியமித்தார் || Ambassadors of America for Pakistan and Afganistan appointed by Obama
Logo
சென்னை 24-10-2014 (வெள்ளிக்கிழமை)
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானுக்கு புதிய அமெரிக்க தூதர்கள்: ஒபாமா நியமித்தார்
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானுக்கு புதிய அமெரிக்க தூதர்கள்: ஒபாமா நியமித்தார்
வாஷிங்டன், ஜுலை.19-
 
பாகிஸ்தானிலும், ஆப்கானிஸ்தானிலும் அமெரிக்க தூதராக இருந்தவர்கள் 2 மாதங்களுக்கு முன்பே ராஜினாமா செய்து விட்டனர். அதனால், 2 மாதங்களாக அப்பதவி காலியாக இருந்தது. இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, இரு நாடுகளுக்கும் புதிய தூதர்களை நியமித்துள்ளார்.
 
பாகிஸ்தானுக்கான அமெரிக்க தூதராக ரிச்சர்டு ஓல்சனை நியமித்துள்ளார். இவர், 2008 முதல் 2011-ம் ஆண்டுவரை ஐக்கிய அரபு எமிரேட்டுக்கான அமெரிக்க தூதராக பணியாற்றி உள்ளார். கடந்த மாதம்வரை, ஆப்கானிஸ்தானில் காபூலில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் மூத்த பொருளாதார ஆலோசகராக பணியாற்றினார்.
 
ஆப்கானிஸ்தானுக்கான புதிய அமெரிக்க தூதராக ஜேம்ஸ் கன்னிங்காம் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது, காபூலில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் துணை தூதராக பணியாற்றி வருகிறார். இவர், 2005 முதல் 2008-ம் ஆண்டு வரை, ஹாங்காங்கில் அமெரிக்க துணை தூதராகவும், 2008 முதல் 2011-ம் ஆண்டுவரை, இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதராகவும் பணியாற்றி உள்ளார்.
 
இந்த நியமனங்களுக்கு அமெரிக்க செனட் சபை ஒப்புதல் அளித்த பிறகு, இருவரும் பதவி ஏற்றுக் கொள்வார்கள். இந்த நியமனங்களை அறிவித்த ஒபாமா கூறுகையில், `இந்த திறமையான நபர்கள், முக்கியமான பொறுப்புகளை ஏற்று நாட்டு மக்களுக்கு சேவை செய்ய முன்வந்திருப்பதற்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இனிவரும் காலங்களில் இவர்களுடன் இணைந்து பணியாற்ற நான் ஆவலுடன் இருக்கிறேன்' என்றார்.  
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

4 வயது சிறுமி பலாத்காரம்: பள்ளி காவலாளி கைது

பெங்களூர் ஜாலஹள்ளியில் உள்ள தனியார் இன்டர்நேஷனல் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வந்த 4 வயது சிறுமி ....»

Maalaimalar.gif
Maalaimalar.gif