Logo
சென்னை 26-05-2013 (ஞாயிற்றுக்கிழமை)
பாங்கி மேலாளர் வீட்டில் 35 பவுன் நகை திருட்டு: வேலைக்கார பெண் கைது
திருவான்மியூர், ஜூலை. 18-

சென்னை பெசன்ட் நகர் 25-வது குறுக்கு தெருவைச்சேர்ந்தவர் குருசாமி (78). ஓய்வு பெற்ற பாங்கி மேலாளர். இவரது மனைவி ரங்கம்மாள் (70). பெசன்ட் நகர் ஊரூர் குப்பத்தைச் சேர்ந்த கிருஷ்ணகுமாரி (24) என்ற பெண் இவர்களது வீட்டில் வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் குருசாமி தனது மனைவி ரங்கம்மாளுடன் வெளியூர் சென்று இருந்தார். வீடு திரும்பிய அவர்கள் பீரோவில் வைத்திருந்த நகை உள்ளதா? என பார்த்தனர். அப்போது அதில் வைத்திருந்த 35 பவுன் நகைகளை காணவில்லை.

இதையடுத்து வீட்டு வேலைக்கார பெண் கிருஷ்ணகுமாரி மீது அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதுகுறித்து காசினி நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் வேலைக்கார பெண் கிருஷ்ண குமாரி கைது செய்யப்பட்டார்.

O
P
E
N

close

அண்மை - சென்னை

section1

டி.எம்.சவுந்தரராஜன் மறைவு: கவர்னர் இரங்கல்

பழம்பெரும் சினிமா பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் மறைவுக்கு தமிழக கவர்னர் கே.ரோசய்யா இரங்கல் தெரிவித்துள்ளார். நேற்று கவர்னர் ....»

Recommendations
Recent Activity