ஜெயலலிதாவின் ஆதரவு மிகப்பெரிய பலம்: சங்மா || jayalalitha support biggest strength sangma
Logo
சென்னை 05-10-2015 (திங்கட்கிழமை)
ஜெயலலிதாவின் ஆதரவு மிகப்பெரிய பலம்: சங்மா
ஜெயலலிதாவின் ஆதரவு மிகப்பெரிய பலம்: சங்மா
சென்னை, ஜூலை 18-

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பி.ஏ.சங்மா இன்று சென்னையில் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவை சந்தித்து பேசினார்.

ஜனாதிபதி தேர்தலுக்கான ஏற்பாடுகள் தொடங்கும் முன்பே ஜனாதிபதி தேர்தலில் காங்கிரசை எதிர்த்து போட்டியிடப்போவதாக முன்னாள் சபாநாயகர் பி.ஏ.சங்மா அறிவித்தார். முதன் முதலில் அவர் சென்னை வந்து தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து பேசி அ.தி.மு.க.வின் ஆதரவை கோரினார். அவருக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆதரவு அளித்தார்.

அ.தி.மு.க.வை தொடர்ந்து ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் கட்சியும் பி.ஏ.சங்மாவை ஆதரிப்பதாக அறிவித்தது. பி.ஏ. சங்மாவை ஆதரிக்குமாறு முதல்-அமைச்சர் ஜெயலலிதா எதிர்க்கட்சி தலைவர்களுடன் டெலிபோனில் பேசி ஆதரவு கேட்டார்.

இதையடுத்து பாரதீய ஜனதா, அகாலி தளம், ஜனதா கட்சி போன்ற கட்சிகள் பி.ஏ. சங்மாவை ஆதரிக்கும் முடிவு எடுத்தன. பி.ஏ.சங்மா அனைத்து மாநிலங்களிலும் சுற்றுப்பயணம் செய்து எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களை சந்தித்து பேசி ஆதரவு திரட்டி வருகிறார். பாரதீய ஜனதா, பிஜு ஜனதா தளம் உள்ளிட்ட தன்னை ஆதரிக்கும் கட்சி தலைவர்களை சந்தித்து நன்றி தெரிவித்தும் வருகிறார்.

தமிழகத்தில் ஆதரவு திரட்டுவதற்காக இன்று சென்னை வந்த பி.ஏ.சங்மா, போயஸ் கார்டன் இல்லத்தில் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து பேசினார். அப்போது ஜனாதிபதி தேர்தலில் தனக்கு ஆதரவு தருமாறு கேட்டுக்கொண்டார்.  

அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சங்மா, தனக்கு ஜெயலலிதா ஆதரவு அளித்திருப்பது மிகப்பெரிய பலம் என்று கூறினார். மேலும் முதன் முதலாக ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுவதற்கு எனது பெயரை முன்மொழிந்தவர் ஜெயலலிதா. அவ்வாறு முன்மொழிந்த்துடன் இதர கட்சிகளின் ஆதரவையும் அவர் திரட்டி தந்தார். இதற்காக அவருக்கு நான் நன்றி தெரிவித்தேன் என்றும் சங்மா கூறினார்.  

முன்னதாக கோட நாட்டில் இருந்த ஜெயலலிதா, ஜனாதிபதி தேர்தலுக்காக இன்று சென்னை திரும்பியது குறிப்பிடத்தக்கது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
tamil_matrimony_60.gif


O
P
E
N

close

அண்மை - சென்னை

section1

வெப்ப சலனம் காரணமாக வட தமிழகத்தின் அனேக இடங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் மாதம் 5-ந் தேதி கேரளாவில் தொடங்கியது. ஜூன் மாதம் ....»

VanniarMatrimony_300x100px_2.gif