வத்தலக்குண்டு ஜூம் ஆ பெரிய பள்ளிவாசல் மதரஸாக்களின் வெள்ளிவிழா: மாணவ மாணவிகளுக்கு பரிசு || vathalagundu jum ah big mosque silver festivel students gift
Logo
சென்னை 03-09-2014 (புதன்கிழமை)
  • உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக தத்து நியமனம்
  • சென்னையில் கருணாநிதி தலைமையில் இன்று டெசோ ஆர்ப்பாட்டம்
  • ராமேசுவரம் மீனவர்கள் 3-வது நாளாக உண்ணாவிரத போராட்டம்
  • என்.எல்.சி தொழிலாளர்கள் இன்று இரவு முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்
வத்தலக்குண்டு ஜூம் ஆ பெரிய பள்ளிவாசல் மதரஸாக்களின் வெள்ளிவிழா: மாணவ-மாணவிகளுக்கு பரிசு
வத்தலக்குண்டு ஜூம் ஆ பெரிய பள்ளிவாசல் மதரஸாக்களின் வெள்ளிவிழா: மாணவ-மாணவிகளுக்கு பரிசு
வத்தலக்குண்டு, ஜூலை. 18-  
 
வத்தலக்குண்டு ஜூம் ஆ பெரிய பள்ளிவாசல் மதரஸாக்களின் வெள்ளி விழா இக்பாலியா உயர் நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு ஜூம் ஆ பெரியபள்ளிவாசல் தலைவரும், இக்பாலியா உயர்நிலைப்பள்ளியின் தாளாளரும், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞருமான அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கினார். ஜூம் ஆ சின்ன பள்ளி வாசல் இமாம் முஜிபூர் ரகுமான்-மிஸ்பாஹியின் கிராத்துடன் விழா தொடங்கியது.
 
ஜூம் ஆ பெரிய பள்ளிவாசல் துணைத் தலைவர் முஹம்மது யூசுப் முன்னிலை வகித்தார். ஜூம் ஆ பெரியபள்ளி வாசல் இமாம் வரவேற்றார். இக்பாலியா உயர் நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஜாபர் சாதிக் தொடக்க உரை நிகழ்த்தினார்.   விழாவில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவனுக்கு தனித்தனியே மதுரை பர்னிச்சர் கணவாபீர் கிரைண்டர்களை பரிசாக வழங்கினார்.
 
நிஸ்வானில் படிக்கும் முதல் மதிப்பெண் பெற்ற மாணவிக்கு தக்னியர் நல முன்னேற்ற சங்க கவுரவ தலைவர் கமால்பாஷா கிரைண்டரை பரிசாக வழங்கினார். மேலும் சிறந்த முறையில் குரானில் இருந்து ஹதீஸ் விளக்கவுரை எழுதிய 4 மாணவிகளுக்கு ரூ.2,500 வீதம் ரூ.10,000-த்தை டெர்ரா பள்ளிவாசல் டிரஸ்டின் தலைவர் கத்தீஜா பீவி வழங்கினார்.
 
இதுதவிர மரதஸா, நிஸ்வான் மாணவ-மாணவிகள் குர்ஆன் புத்தகங்களை கொண்டு செல்ல இலவசமாக பேக்குகளை ஒப்பந்தகாரர் ஷாஜஹான், வெல்கம் ஸ்டோர் ரபீக் ஆகியோர் வழங்கினர். மேலும் போட்டிகளில் கலந்து கொண்ட அனைவருக்கும் பள்ளியின் தாளாளர் அப்துல் ரஹ்மான் பரிசுகளை வழங்கினார். இலவச சீருடைகள் மதரஸா, நிஸ்வான் மாணவ-மாணவிகளுக்கு இலவச சீருடைகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - மாநிலச்செய்திகள்

section1

கைவினை கலைஞர்கள் 10 பேருக்கு ஜெயலலிதா விருது வழங்கினார்

முதல்-அமைச்சர் ஜெயலலிதா 10 பேருக்கு “வாழும் கைவினைப் பொக்கிஷம் விருது” வழங்கினார். பூம்புகார் என்ற பெயரில் தமிழ்நாடு ....»