கொல்லப்பட்ட பிறகு கடாபியின் உடலை அவமதித்த புரட்சி படை: புதிய வீடியோவால் சர்ச்சை
பதிவு செய்த நாள் :
புதன்கிழமை,
ஜூலை 18,
4:33 PM IST
1
கருத்துக்கள்
திரிபோலி, ஜூலை.18-
லிபியாவின் சர்வாதிகாரி முவம்மர் கடாபி பொது மக்களின் புரட்சி மூலம் கடந்த அக்டோபரில் பதவியில் இருந்து விரட்டப்பட்டார். பின்னர் அவரை புரட்சிபடையினர் அடித்து கொன்றனர். அப்போது அவரது உடல் இழுத்து செல்லப்பட்டு அவமதிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. ஆனால் மறுக்கப்பட்டது.
தற்போது அது குறித்த வீடியோ யூடியூப் இணைய தளத்தில் வெளியாகி உள்ளது. அதில் கொல்லப்பட்ட கடாபியின் உடல் அரை நிர்வாணமாக ரத்த வெள்ளத்தில் கிடக்கிறது. அப்போது அவரது தலையை ஒரு புரட்சி படை வீரர் இழுக்கிறார்.மேலும் அவரைப் போன்று ஒருவர் அராபி மொழியில் இழிவாக பேசுகிறார்.
இச்செயல் அவரை மிகவும் அவமதிப்புக்குள் ளாகியுள்ளது. இந்த வீடியோ குறித்து சிரியா போராட்டக் குழுவைச் சேர்ந்த சமி அல் ஹம்வி டுவிட்டர் இணைய தளத்தில் தனது கருத்தை எழுதியுள்ளார். அதில் சிரியா அதிபர் பஷர் அல் ஆசாத்துக்கும் இதே கதி தான் ஏற்படும். எனவே இந்த வீடியோ காட்சிகளை யாராவது ஆசாத்துக்கு அனுப்பி வையுங்களேன் என்ற மிரட்டல் விடுக்கும் வகையில் கூறியுள்ளார்.
close
மலேசிய தலைநகர் கோலாலம்பூர் அருகே பாண்டிங் நகரில் என்.பத்மநாபன் (வயது 44) என்ற தமிழ் வக்கீலுக்கு ....»
1
கருத்துக்கள்