கேரள சிறுமி கற்பழித்து கொலை: தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.வுக்கு மரபணு பரிசோதனை செய்ய முடிவு || kerala small child harassment murder dmk former mla genetic test
Logo
சென்னை 19-04-2015 (ஞாயிற்றுக்கிழமை)
கேரள சிறுமி கற்பழித்து கொலை: தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.வுக்கு மரபணு பரிசோதனை செய்ய முடிவு
கேரள சிறுமி கற்பழித்து கொலை: தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.வுக்கு மரபணு பரிசோதனை செய்ய முடிவு
பெரம்பலூர், ஜூலை. 18-
 
பெரம்பலூர் தொகுதி தி.மு.க. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார். இவர் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் பீர்மேடு பகுதியை சேர்ந்த சந்திரன்-சுசீலா தம்பதியின் மகள் சத்யா (வயது 15) என்பவரை கடந்த மாதம் 23-ந்தேதி புரோக்கர்கள் மூலம் தனது வீட்டு வேலை செய்வதற்காக அழைத்து வந்தார்.   ஆனால் தன்னால் இங்கு வேலை செய்ய முடியவில்லை என்றும், உடனே சொந்த ஊருக்கு அழைத்து செல்லு மாறும் சத்தயா தனது தந்தையிடம் கூறியுள்ளார்.
 
இந்த நிலையில் சத்யா விஷம் குடித்துவிட்டதாக அவரது பெற்றோருக்கு தகவல் கிடைத்தது. பெரம்பலூர் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு பின்னர் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சத்யா அங்கு இறந்தார்.
 
இதுகுறித்து சத்யாவின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையே கேரள மாநிலம் கோட்டயத்தில் சத்யாவுக்கு மீண்டும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டதில் அவர் பாலியல் பலாத்காரம் செய்து கொலையுண்ட அதிர்ச்சி தகவல் வெளியானது.  
 
இதையடுத்து சத்யாவை கற்பழித்து கொன்றதாக முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ் குமார், அவரது நண்பர்கள் ஜெய்சங்கர், அன்பரசு ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் சத்யாவை அழைத்து வந்த புரோக்கர்கள் 2 பேரும் கேரளாவில் கைதானார்கள்.
 
இந்த வழக்கில் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்குமாருக்கு மரபணு பரிசோதனை நடத்த அனுமதி கேட்டு பெரம்பலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் போலீசார் நேற்று மனுதாக்கல் செய்துள்ளனர். இந்த மனு மீதான விசாரணை நாளை (19-ந்தேதி) நடைபெறும் என்று நீதிபதி தெரிவித்தார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - மாநிலச்செய்திகள்

section1

சத்தியமங்கலம் அருகே வனப்பகுபதியில் நடந்து சென்ற விவசாயியை மிதித்து கொன்ற யானை

சத்தியமங்கலம், ஏப்.19–ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதி சுஜில்கரை பகுதியை சேர்ந்தவர் சடையன் (வயது 60), விவசாய ....»