திருவனந்தபுரத்தில் உணவு சாப்பிட்ட கல்லூரி மாணவர் சாவு: 2 ஓட்டல்கள் சூறை || thiruvananthapuram food ate college student dead 2 hotel seized
Logo
சென்னை 01-12-2015 (செவ்வாய்க்கிழமை)
திருவனந்தபுரத்தில் உணவு சாப்பிட்ட கல்லூரி மாணவர் சாவு: 2 ஓட்டல்கள் சூறை
திருவனந்தபுரத்தில் உணவு சாப்பிட்ட கல்லூரி மாணவர் சாவு: 2 ஓட்டல்கள் சூறை
திருவனந்தபுரம், ஜூலை. 18-
 
திருவனந்தபுரம் வழுதைகாடு பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் 3 தினங்களுக்கு முன்பு குடும்பத்துடன் உணவு சாப்பிட்ட நடிகர் திலகன் மகன் வாந்தி-மயக்கம் ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். மேலும் அந்த ஓட்டலில் சாப்பிட்ட 20 பேரும் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து அந்த ஓட்டலை சுகாதாரத்துறை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.
 
இந்த நிலையில் ஆலப்புழாவை சேர்ந்த மாத்யூ (வயது 21) என்ற கல்லூரி மாணவரும் அதே ஓட்டலில் 2 சிக்கன் சவர்மா வாங்கி இருந்தார். பெங்களூரில் படித்து வந்த மாத்யூ பஸ்சில் செல்லும்போது சவர்மாவை சாப்பிட்டார். கல்லூரி விடுதிக்கு சென்றதும் அவருக்கு வாந்தி-பேதி ஏற்பட்டது. இதனால் நண்பர்கள் அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். கடுமையான வயிற்றுவலி காரணமாக மாத்யூ சிகிச்சை பலனளிக்காமல் இறந்து போனார். மாத்யூ சாவுக்கு ஓட்டல் உணவுதான் காரணம் என்று டாக்டர்கள் கூறினர்.
 
இதுகுறித்து மாத்யூவின் பெற்றோர் திருவனந்தபுரம் மியூசியம் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் ஓட்டல் உரிமையாளர் அப்துல் காதர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் ஓட்டலில் உணவு சாப்பிட்டு மாணவர் மாத்யூ பலியான சம்பவத்தால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் யுவமோர்ச்சா, தொண்டர்களும், சிவசேனாவை சேர்ந்தவர்களும் திருவனந்தபுரம் வழுதைகாடு பகுதியில் உள்ள 2 ஓட்டல்களை சூறையாடினர்.
 
இதற்கிடையே திருவனந்தபுரம் வழுதைகாடு, எம்.ஜி. ரோடு, குமாரபுரம், களக்கூட்டம் உள்பட சுற்று வட்டார பகுதியில் உள்ள அனைத்து சிறிய, பெரிய ஓட்டல்களிலும் திருவனந்தபுரம் மேயர் சந்திரிகா தலைமையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதில் காலாவதியான உணவு வகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
 
களக்கட்டத்தில் ஒரு ஓட்டலுக்கு சென்ற மேயர் அங்குள்ள தின்பண்டங்கள் காலாவதியானது என்பதை கண்டுபிடித்தார். இதனால் அந்த ஓட்டலுக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும் ஓட்டலில் சாப்பிட வருவோர் தரம் குறைந்த உணவு என்று தெரியவந்தால் உடனடியாக மாநகராட்சி சுகாதார பிரிவுக்கு தகவல் தெரிவிக்கும் வகையில் இலவச டெலிபோன் எண்ணையும் பல ஓட்டல்களில் எழுதி வைக்க திருவனந்தபுரம் மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Newbharath.gif


O
P
E
N

close

அண்மை - தேசியச்செய்திகள்

section1

தேசிய கீதத்திற்கு எழுந்து நிற்காத இஸ்லாமிய குடும்பத்தினர் திரையரங்கிலிருந்து வெளியேற்றம்: வலுக்கும் கண்டனம்

சினிமா திரையரங்கில் இந்திய தேசிய கீதம் ஒலிபரப்பப்பட்ட போது, எழுந்து நிற்காத இஸ்லாமிய குடும்பத்தை, ....»

AadidravidarMatrimony_300x100px_28-10-15-3.gif