இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடர்: இலங்கை அணியில் உதனா சேர்ப்பு || uthanna taken into srilankan team to play against india
Logo
சென்னை 27-02-2015 (வெள்ளிக்கிழமை)
இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடர்: இலங்கை அணியில் உதனா சேர்ப்பு
இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடர்: இலங்கை அணியில் உதனா சேர்ப்பு
கொழும்பு, ஜூலை 18-

இந்தியாவுக்கு எதிராக 5 போட்டி கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடும் இலங்கை அணி அறிவிக்கப்பட்டு உள்ளது. இடக்கை வேகப்பந்து வீச்சாளர் 24 வயதான இசூரு உதனா புதிதாக சேர்க்கப்பட்டு உள்ளார்.

இதுவரை ஆறு 20 ஓவர் சர்வதேச போட்டிகளில் விளையாடி உள்ள உதனா ஒரு நாள் போட்டிகளில் ஆடியதில்லை. இதே போல் பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி மூன்று ஒரு நாள் போட்டிகளுக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருந்த சுழற்பந்து வீச்சாளர் ஹெராத் திரும்பியுள்ளார். பெர்னாண்டோ, பிரதீப், சஜீவா வீரஹூன் நீக்கப்பட்டு உள்ளனர்.

இலங்கை அணி விவரம் வருமாறு:-மஹேலா ஜெயவர்த்தனே (கேப்டன்), மேத்ïஸ் (துணை கேப்டன்), தில்ஷன், சங்கக்கரா, தரங்கா, சன்டிமால், குலசேகரா, திசரா பெரேரா, திரிமன்னே, மலிங்கா, கபுகேதரா, ஹெராத், செனநாயக்கே, ஜீவன் மென்டிஸ், உதனா.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - விளையாட்டுச்செய்திகள்

section1

சிட்னியில் ஏ.பி.டி வில்லியர்ஸ் ருத்ரதாண்டவம்: 66 பந்தில் 162 ரன்களை விளாசினார்- தென்னாப்பிரிக்கா 408 ரன்கள் குவிப்பு

உலக கோப்பை போட்டியின் 19வது லீக் ஆட்டத்தில் இன்று வெஸ்ட் இண்டீஸ் அணியும் தென் ஆப்பிரிக்கா ....»

amarprakash160600.gif
amarprakash160600.gif