சொத்து குவிப்பு வழக்கில் நீதிபதி நியமனத்துக்கு எதிரான மனு தள்ளுபடி: பெங்களூர் தனி கோர்ட் உத்தரவு || bangalore special court dismisses case opposing judge
Logo
சென்னை 29-11-2015 (ஞாயிற்றுக்கிழமை)
சொத்து குவிப்பு வழக்கில் நீதிபதி நியமனத்துக்கு எதிரான மனு தள்ளுபடி: பெங்களூர் தனி கோர்ட் உத்தரவு
சொத்து குவிப்பு வழக்கில் நீதிபதி நியமனத்துக்கு எதிரான மனு தள்ளுபடி: பெங்களூர் தனி கோர்ட் உத்தரவு
பெங்களூர், ஜூலை 18-

தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூர் தனிக்கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் கோர்ட்டில் நேரில் ஆஜராகி ஜெயலலிதா வாக்குமூலம் அளித்துவிட்டார்.

இதைத்தொடர்ந்து சசிகலாவிடம் வாக்குமூலம் வாங்கும் பணி தொடங்கப்பட்டு பாதியில் உள்ளது. இந்த நிலையில் அரசாணை பிறப்பிக்கப்படாததால் நீதிபதி மல்லிகார்ஜுனய்யா நியமனம் செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று கோரி குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் பெங்களூர் தனிக்கோர்ட்டில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனு மீது இருதரப்பு வாதமும் நடைபெற்றது. தனிக்கோர்ட் நீதிபதி நியமனம் செய்யப்படும்போது அரசாணை பிறப்பிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளதாகவும், ஆனால் நீதிபதி மல்லிகார்ஜுனய்யா நியமனத்துக்கு அரசாணை பிறக்கப்பிடவில்லை என்றும் எதிர்தரப்பு வக்கீல்கள் வாதிட்டனர். இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அரசு வக்கீல் வாதிட்டார். இருதரப்பு வாதங்களும் நிறைவு பெற்ற நிலையில் இந்த மனு மீது 17-ந் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி மல்லிகார்ஜுனய்யா அறிவித்தார்.

அதன்படி, பெங்களூர் தனிக்கோர்ட்டில் சொத்து குவிப்பு வழக்கு நீதிபதி மல்லிகார்ஜுனய்யா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது எதிர்தரப்பு சார்பில் நீதிபதியின் நியமனம் செல்லாது என்று தாக்கல் செய்யப்பட்ட மனுவை தனிக்கோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் இந்த வழக்கை விசாரிக்கும் தற்போதைய கோர்ட் அதிகாரி சிறப்பு நீதிபதி அல்ல என்பதற்கு மனுதாரர்கள் கூறியுள்ள வாதத்தில் உறுதியான காரணம் எதுவும் இல்லை என்று நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.

மேலும் நீதிபதி நியமனம் செல்லாது என்ற மனுவை ஐகோர்ட் விசாரணை நடத்த பரிந்துரைக்க இயலாது. இந்த வழக்கை விசாரிப்பதில் இருந்து இந்த கோர்ட் விலக தேவையில்லை என்றும் நீதிபதி கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து ஐகோர்ட்டில் அப்பீல் செய்வதற்கு வசதியாக 2 வாரம் காலஅவகாசம் வழங்க வேண்டும் என்று எதிர்தரப்பு வக்கீல்கள் குமார் மற்றும் மணிசங்கர் கோரினர். இதற்கு அரசு வக்கீல் சந்தேஷ் சவுட்டா எதிர்ப்பு தெரிவித்தார். சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி இந்த வழக்கு விசாரணை தினமும் நடைபெற வேண்டும் என்றும் அவர் வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி மல்லிகார்ஜுனய்யா இந்த வழக்கு விசாரணையை 24-ந் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார். அன்றைய தினம் சசிகலாவிடம் வாக்குமூலம் பெறும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் நீதிபதி கூறினார். மேலும் நீதிபதி நியமனம் செல்லாது என அறிவிக்க கோரும் அந்த மனுக்களை மீண்டும் விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரி நேற்று முன்தினம் எதிர்தரப்பு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களையும் நீதிபதி தள்ளுபடி செய்தார்.

முன்னதாக வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரி ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி சார்பில் அவர்களது வக்கீல்கள் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். அதற்கு கோர்ட் அனுமதி அளித்தது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Newbharath.gif


O
P
E
N

close

அண்மை - மாநிலச்செய்திகள்

section1

கார் மோதி 2 பேர் பலி: போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது

நாட்டறம்பள்ளி, நவ.29–ஜோலார்பேட்டை அருகே உள்ள பக்கிரிதக்கா கிராமத்தை சேர்ந்தவர் ராசு (வயது 24). அதே பகுதியை ....»

MudaliyarMatrimony_300x100px.gif