ஜனாதிபதி தேர்தலில் பிரணாப்புக்கு ஆதரவு: மம்தாவுக்கு நன்றி தெரிவித்தார் பிரதமர் || PM thanks Mamata for extending support to Pranab
Logo
சென்னை 09-10-2015 (வெள்ளிக்கிழமை)
ஜனாதிபதி தேர்தலில் பிரணாப்புக்கு ஆதரவு: மம்தாவுக்கு நன்றி தெரிவித்தார் பிரதமர்
ஜனாதிபதி தேர்தலில் பிரணாப்புக்கு ஆதரவு: மம்தாவுக்கு நன்றி தெரிவித்தார் பிரதமர்
கொல்கத்தா,ஜூலை.18-
 
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளர் பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவளிப்பதாக திரிணாமூல் காங்கிரஸ் கட்சி இன்று அறிவித்தது. பிரணாப்பை ஆதரிக்கும் முடிவை எடுத்ததற்காக திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கும், அக்கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜிக்கும் பிரதமர் மன்மோகன் சிங் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
 
இது தொடர்பாக இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின்போது பேசிய மம்தா, தங்கள் ஆதரவைக் கோரி சோனியாவும், மன்மோகன் சிங்கும் தன்னை அணுகியதாகக் கூறினார். மேலும் கூட்டணி மீது கொண்ட அக்கறை, நாட்டு நலன் மற்றும் மக்கள் நலனில் தனக்குள்ள அக்கறை காரணமாக பிரணாப்பை ஆதரிப்பதாகவும் மம்தா கூறியிருந்தார்.
 
கட்சியின் இந்த முடிவை மம்தா அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்கு முன்னதாகவே, தங்கள் கட்சி பிரணாப்பை ஆதரிக்கும் என திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி.யான குணால் கோஷ் கூறியிருந்தார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
tamil_matrimony_60.gif


O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

கால்பந்து நிர்வாகத்தில் முறைகேடு: செப் பிளாட்டர், பிளாட்டனி அதிரடியாக இடைநீக்கம்

உலக கோப்பை கால்பந்து போட்டிகளை நடத்தும் வாய்ப்பை ஓட்டெடுப்பு மூலம் குறிப்பிட்ட நாடுகளுக்கு உரிமம் வழங்கப்பட்டதிலும், ....»

VanniarMatrimony_300x100px_2.gif