கர்நாடகாவை ஏமாற்றிய தென்மேற்கு பருவ மழை || Rain cheats Karnataka
Logo
சென்னை 28-03-2015 (சனிக்கிழமை)
கர்நாடகாவை ஏமாற்றிய தென்மேற்கு பருவ மழை
கர்நாடகாவை ஏமாற்றிய தென்மேற்கு பருவ மழை
பெங்களூர்,ஜூலை. 17  -
 
பருவ மழை எதிபார்த்த அளவு பெய்யாததால் கடற்கரை பகுதிகள் தவிர கர்நாடகாவின் பெரும்பாலான மாவட்டங்கள் 50 சதவிகித மழை கூட இன்றி வறண்டு கிடக்கிறது.
 
கர்நாடக மாநிலத்தின் மேற்குப் பகுதியிலுள்ள கடற்கரை பகுதிகள் மட்டுமே போதிய அளவு பெற்றுள்ள நிலையில் மற்ற பெரும்பாலான மாவட்டங்கள் எதிர்பார்த்த மழையின்றி வறண்டு போய் உள்ளன. நாடு முழுவதும் பருவ மழை அளவு இன்னும் 23 சதவிகிதம் குறைவாகவே உள்ளதாகவும், இதனால் நெல், பருப்பு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துகள் பயிரிடப்படாமல் பருவகால பயிர்கள் பயிரிடுவதில் பெரும் தடை ஏற்ப்பட்டுள்ளது.
 
முன்னதாக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் இது குறித்து மத்திய விவசாயத்துறை மந்திரி சரத் பவாரிடம் நிவாரணம் கேட்டு முறையிட்டுள்ளார். இதற்கு பதிலளித்த சரத் பவார், கர்நாடகா இன்னும் முழுமையான விவரங்களை எங்களுக்கு வழங்கவில்லை. ஆகஸ்ட் முதல் வாரத்தில் அவர்களுடைய விவரங்கள் கிடைத்த பிறகு, மத்திய குழுக்கள் அங்கு சென்று பார்வையிட்டு சேதங்கள் குறித்த விவரங்கள் அளித்த பின்னரே அவர்களுக்கு என்ன செய்ய முடியும் என்பது குறித்து கூற முடியும் என்றும் அவர் கூறினார்.
 
கூடுதல் நிதி கேட்கிற ஒரே மாநிலம் கர்நாடகாதான் என்றும் அவர் கூறினார். கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய இருமாநிலங்கள் மழை இன்றி பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அதனால் தானிய உற்பத்தி பெருமளவில் பாதிக்கக்கூடும் என்றும் சரத் பவார் கூறினார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

ஏடிஎம் இயந்திரத்துக்கு பணம் நிரப்பச்சென்ற வேனுடன் டிரைவர் தப்பி ஓட்டம்

மும்பையின் ட்ராம்பே புறநகர் பகுதியில், ஏடிஎம் இயந்திரத்திற்கு பணம் நிரப்புவதற்காக சென்ற வேனுடன் அதன் டிரைவர் ....»