அன்சாரி நாளை வேட்புமனு தாக்கல்: மம்தாவின் ஆதரவையும் கோரினார் || Ansari file nomination tomorrow calls Mamata support
Logo
சென்னை 30-11-2015 (திங்கட்கிழமை)
  • ராகுல் காந்தியின் இங்கிலாந்து குடியுரிமை குறித்து சி.பி.ஐ. விசாரணை கோரிய மனு தள்ளுபடி
  • நில அபகரிப்பு தொடர்பான புகார்களை தனி நீதிமன்றம் விசாரிப்பதற்கு தடை நீட்டிப்பு
  • தமிழக அரசு மழைக்கால தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கவில்லை: தமிழிசை குற்றச்சாட்டு
  • தமிழகத்தில் மழை தொடரும் என வானிலை மைய இயக்குனர் தகவல்
  • சகிப்பின்மை விவாதத்தில் ராஜ்நாத் மீது கம்யூனிஸ்ட் உறுப்பினர் குற்றச்சாட்டு: மக்களவை ஒரு மணிநேரம் ஒத்திவைப்பு
  • விஜயதாரணி-இளங்கோவன் இடையிலான பிரச்சினைக்கு ஓரிரு நாளில் தீர்வு: நக்மா தகவல்
அன்சாரி நாளை வேட்புமனு தாக்கல்: மம்தாவின் ஆதரவையும் கோரினார்
அன்சாரி நாளை வேட்புமனு தாக்கல்: மம்தாவின் ஆதரவையும் கோரினார்
புதுடெல்லி, ஜூலை 17-

இரண்டாவது முறையாக துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புகள் அதிகமுள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளரான ஹமீது அன்சாரி, நாளை தனது வேட்புமனுக்களை தாக்கல் செய்ய உள்ளார்.

ஆகஸ்ட் 7ம் தேதி நடைபெறவுள்ள இந்த துணை ஜனாதிபதி தேர்தலின் பொறுப்பு அதிகாரியான லோக்சபா பொதுச் செயலாளர் டி.எம். விஸ்வநாதனிடம் அன்சாரி 4 செட் வேட்பு மனுக்களை வழங்குவார் என்று மத்திய பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரியான பவன் குமார் பன்சால் கூறினார்.

வேட்புமனு தாக்கலின்போது பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் கட்சித்தலைவர் சோனியா காந்தி, சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் சிங், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, ராஷ்ட்ரிய ஜனதாதள கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் சீதாராம் யெச்சூரி ஆகியோர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாராளுமன்ற இரு அவைகளிலும் உள்ள மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 790. அதில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் 19  வாக்குகள் இல்லாமல் 470 வாக்குகள் ஹமீது அன்சாரிக்கு நிச்சயம் கிடைக்கும் என்றும், அவருக்கே வெற்றி வாய்ப்புகள் அதிகம் என்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சியினர் நம்பிக்கை தெரிவித்தனர்.

மேலும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி மற்றும் சிறிய கட்சிகள் ஆதரவோடு 500க்கும் மேற்பட்ட வாக்குகள் அன்சாரிக்கு கிடைக்கும் என்றும் உறுதியாக கூறப்படுகிறது.

நாளை வேட்புமனு தாக்கல் செய்யவுள்ள ஹமீது அன்சாரி இன்று திரிணாமூல் காங்கிரஸ் கட்சித்தலைவர் மம்தா பானர்ஜியிடம் தனக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Newbharath.gif


O
P
E
N

close

அண்மை - தேசியச்செய்திகள்

section1

மகாராஷ்டிராவில் கோவிலுக்குள் பெண் நுழைந்ததால் சிலையை சுத்தம் செய்த நிர்வாகம்

மகாராஷ்டிராவின் அகமத்நகர் அருகே தடைகளை மீறி கோவிலுக்குள் நுழைந்து பெண் ஒருவர் வழிபாடு நடத்தியதால் சனீஸ்வரன் ....»

MudaliyarMatrimony_300x100px.gif