பிரணாப் முகர்ஜிக்கு மம்தா ஆதரவு: பாரதீய ஜனதா ஏமாற்றம் || BJP takes a dig at Mamata for deciding to back Pranab
Logo
சென்னை 05-03-2015 (வியாழக்கிழமை)
பிரணாப் முகர்ஜிக்கு மம்தா ஆதரவு: பாரதீய ஜனதா ஏமாற்றம்
பிரணாப் முகர்ஜிக்கு மம்தா ஆதரவு:  பாரதீய ஜனதா ஏமாற்றம்
புதுடெல்லி, ஜூலை.17-
 
திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி, ஜனாதிபதி வேட்பாளர் பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவு அளித்துள்ளது ஏமாற்றம் அளித்துள்ளதாக பாரதீய ஜனதா கூறியுள்ளது. இந்த நிலையை எடுப்பதற்கு அவரை கட்டாயப்படுத்தியது என்ன என தெரிந்துகொள்ள வேண்டுமெனவும் அக்கட்சி கேட்டுக்கொண்டுள்ளது.
 
இதுதொடர்பாக பாரதீய கட்சியின் செய்தித் தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது:-
 
திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி பிரணாப் முகர்ஜியை ஆதரிக்கிறார் என்ற செய்தி எங்களை மிகவும் ஏமாற்றிவிட்டது. திரிணாமூல் காங்கிரஸ் கட்சி, ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஒரு அங்கம் என்று புரிந்துகொள்ளுகிறோம். ஆனால் இந்த அரசின் மக்கள் விரோத கொள்கைகள், கூட்டணி கட்சியினரின் லஞ்ச ஊழல், பெட்ரோல் விலை உயர்வு, சில்லறை விற்பனையில் அன்னிய முதலீடு போன்ற நடவடிக்கைகளுக்கு எதிராக மம்தா இருந்துவந்தார்.
 
கடந்த சில வாரங்களாக தங்கள் ஆதரவு யாருக்கு என்ற முடிவை அறிவிக்காமல் எதிர்பார்ப்பை ஏற்படுத்திக் கொண்டிருந்த திரிணாமூல் காங்கிரஸ் கட்சி, பிரணாப் முகர்ஜிக்கே எங்கள் கட்சியினர் வாக்களிப்பார்கள் என்ற அறிவிப்பு அனைவரின் எதிர்பார்ப்பிற்கும் ஒரு முற்றுப்புள்ளியை வைத்துள்ளது. மேலும் மம்தா தனக்கு ஆதரவு அளிப்பார் என்று எதிர்பார்த்த பி.ஏ.சங்மாவின் நம்பிக்கையை இது நொறுக்கிவிட்டது. 
 
எந்த கட்டாயத்திற்கு உட்பட்டு அவர் ஐக்கிய முற்போக்கு கட்சி வேட்பாளரை ஆதரிக்கிறார்? மத்திய அரசுக்கு எதிராக பேசி வந்த அவர் திடீரென மாறி பிரணாபுக்கே தங்கள் ஆதரவு என்று கூறியது எல்லாம் ஒரு நடிப்பா? மம்தா சில காரணங்களுக்காக போராட்டம் நடத்த தயங்கினார்.
 
இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

நிலம் கையகப்படுத்துதல் மசோதாவை நிறைவேற்ற விடாமல் தடுக்கும் எதிர்க்கட்சிகள்: மோடி குற்றச்சாட்டு

நிலம் கையகப்படுத்துதல் மசோதாவை மாநிலங்களவையில் நிறைவேற்றவிடாமல் எதிர்கட்சிகள் தடுப்பதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டினார். ....»

amarprakash160600.gif
amarprakash160600.gif