ராசிபுரம் அருகே கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி சாவு || rasipuram employee falls down well dead
Logo
சென்னை 15-09-2014 (திங்கட்கிழமை)
  • ஈரோடு: பவானி அடுத்த தளவாய்பேட்டை துணை மின்நிலையத்தில் தீ விபத்து
  • சென்னை: கலைஞர் அரங்கில் திமுக சார்பில் இன்று மாலை முப்பெரும் விழா
  • பூந்தமல்லியில் இன்று வைகோ தலைமையில் மதிமுக மாநாடு
  • சீன அதிபர் இந்தியா வருகை குறித்து அரசியல் கட்சிகள் விமர்சனம்
ராசிபுரம் அருகே கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி சாவு
ராசிபுரம் அருகே கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி சாவு
ராசிபுரம், ஜூலை.17-
 
ராசிபுரம் அருகேயுள்ள மேட்டுக்காட்டைச் சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மகன் முருகேசன் என்கிற மம்டியான் (32) கூலி தொழிலாளி. இவர் நேற்று (திங்கட்கிழமை) இரவு அங்குள்ள பிள்ளையார் கோவில் எதிரில் உள்ள கிணற்றின் மீது உட்கார்ந்து இருந்தார்.
 
அப்போது எதிர்பாராத விதமாக திடீரென்று அந்த கிணற்றில் அவர் தவறி விழுந்ததாக தெரிகிறது. 80 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்ததால் தலையில் அடிபட்டு இறந்தார். இது பற்றி ராசிபுரம் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு நிலைய அதிகாரி துரைசாமி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று பிணமாக கிடந்த முருகேசன் உடலை கிணற்றில் இருந்து மீட்டனர்.
 
ராசிபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நித்யா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முருகேசனின் உடலை கைப்பற்றி ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்துபோன முருகேசனுக்கு சசிகலா என்ற மனைவியும், சவுமியா பிரியா என்ற மகளும், மினீஷ்குமார் என்ற மகனும் உள்ளனர். 
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - நாமக்கல்

section1

புரட்டாசி மாதத்தில் கறிக்கோழி, முட்டை விலை குறைய வாய்ப்பு

மோகனூர், செப். 15–புரட்டாசி மாதம் பிறந்தாலே ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி வெங்கடாஜலபதி சாமிதான் நினைவுக்கு ....»