இலங்கை பயணம் 20 ஓவர் உலகக்கோப்பை போட்டிக்கு ஊக்கம் அளிக்கும்: டோனி || We want to start season on good note Dhoni
Logo
சென்னை 04-06-2015 (வியாழக்கிழமை)
இலங்கை பயணம் 20 ஓவர் உலகக்கோப்பை போட்டிக்கு ஊக்கம் அளிக்கும்: டோனி
இலங்கை பயணம் 20 ஓவர் உலகக்கோப்பை போட்டிக்கு ஊக்கம் அளிக்கும்: டோனி
சென்னை, ஜூலை 17-
 
டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 5 ஒருநாள் போட்டி மற்றும் ஒரே ஒரு 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது.
 
இந்தியா- இலங்கை அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி வருகிற 21-ந்தேதி நடக்கிறது. ஆகஸ்ட் 4-ந்தேதி வரை ஒருநாள் தொடரில் விளையாடும். 20 ஓவர் போட்டி ஆகஸ்ட் 7-ந்தேதி நடைபெறும். இப்போட்டிக்காக இந்திய அணி நாளை இலங்கை புறப்பட்டு செல்கிறது.
 
இலங்கை தொடருக்காக இந்திய வீரர்கள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 2 நாட்களாக பயிற்சியில் ஈடுபட்டனர். இன்று பயிற்சி முடிந்த பின்னர் இந்திய அணியின் கேப்டன் டோனி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
 
அப்போது அவர் கூறியதாவது:-
 
தற்போது புதிய சீசனில் அடியெடுத்து வைக்கும் இந்திய அணி, லிமிடெட் ஓவர் போட்டிகளில் சிறப்பான பங்களிப்பினை நிறைவேற்ற வேண்டும். தற்போது நடைபெற உள்ள இலங்கைக்கு எதிரான தொடர், செப்டம்பர்-அக்டோபர் மாதம் நடைபெற உள்ள 20 ஓவர் உலகக்கோப்பை போட்டித் தொடருக்கு நம்பிக்கையை அதிகரிக்கும் உந்துசக்தியாக இருக்கும்.
 
இப்போட்டிகள் அனைத்தும் பரபரப்பாக இருக்கும்.  ஆனால் நமது நிலையில் நாம் தொடர்ந்து சிறப்பாக ஆடவேண்டும். பல்வேறு இடங்களுக்கு பயணம் செய்து பல்வேறுபட்ட ஆடுகளங்களில் விளையாடவேண்டும். எனவே இந்த சீசனை வெற்றியுடன் துவக்க வேண்டும்.
 
இலங்கை நமக்கு புதிய இடம் இல்லை. ஆண்டுக்கு ஒரு முறை அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறையேனும் அங்கு விளையாடியிருக்கிறோம். பருவ நிலையும் இந்தியாவை விட வேறுபடவில்லை. இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது.
 
பந்து வீச்சாளர்கள் எப்படி பந்து வீசுகிறார்கள்? பேட்ஸ்மேன்கள் பார்ட்னர்களுடன் எவ்வாறு நிலைத்து நின்று ஆடுகிறார்கள்? என்பதுதான் மிகவும் முக்கியம். இவை இல்லாமல் ஒரு அணி வெற்றி பெறுவது கடினம்.
 
இந்திய அணி ஒருநாள், டெஸ்ட் மற்றும் 20 ஓவர் போட்டி என மூன்று துறைகளிலும் முன்னேற கடுமையாக உழைத்து வருகிறது. ஆனாலும் அடுத்து வர உள்ள 20 ஓவர் உலகக்கோப்பை மிகவும் முக்கியம்.
 
கடந்த சீசன் போட்டிகள் இந்திய அணிக்கு கடினமான நேரம் என்று பயிற்சியாளர் பிளெட்சர் கூறியிருந்தார். ஆனால் இந்த ஆண்டு பழைய நிலைக்குத் திரும்பும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
 
இவ்வாறு டோனி கூறினார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் பருவமழை குறைவுக்கு காரணம் என்ன? வானிலை அதிகாரிகள் தகவல்

தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் பருவமழை குறைபாடுக்கு காரணம் என்ன என்பதற்கு வானிலை இலாகா அதிகாரிகள் ....»