ஒரத்தநாட்டில் வேளாண்மை கூட்டுறவு வங்கி பெண் அதிகாரி சஸ்பெண்ட் || orathanadu agriculture co operative bank lady officer suspend
Logo
சென்னை 02-09-2014 (செவ்வாய்க்கிழமை)
ஒரத்தநாட்டில் வேளாண்மை கூட்டுறவு வங்கி பெண் அதிகாரி சஸ்பெண்ட்
ஒரத்தநாட்டில் வேளாண்மை கூட்டுறவு வங்கி பெண் அதிகாரி சஸ்பெண்ட்
ஒரத்தநாடு,ஜுலை. 17-
 
ஒரத்தநாடு அருகே உள்ள சமையன்குடிகாடு கிராமத்தில் வேளாண்மை கூட்டுறவு வங்கிக்கான புதிய கட்டிடம் கட்டும்பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கட்டிட பராமரிப்பும், கட்டிடம் கட்டும் பணியை விரைவாக செய்ய தவறி காரணத்துக்காகவும் முறைப்படி வரவு செலவு ஒப்படைக்காததாலும் இதற்கான தனி அதிகாரி தீட்சினியாவை தஞ்சாவூர் மண்டல கூட்டுறவு இணைப் பதிவாளர் அந்தோணிசாமி பீட்டர் நேற்று மாலை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.
 
இதனைத் தொடர்ந்து இன்று முதல் புதிய தனி அதிகாரியாக கதிரவன் பொறுப்பு உள்ளார். ஒரத்தநாடு பகுதிகளில் வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் அதிக அளவில் கையாடலும், முறை கேடுகளும் நடந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் ஒரு பெண் அதிகாரியை சஸ்பெண்டு செய்தது வங்கி அலுவலர்களுக்கிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தஞ்சாவூர்