அஞ்சுகிராமம் அருகே எம்.பி. உறவுப்பெண் கொலைக்கு காரணம் என்ன? போலீஸ் சூப்பிரண்டு பேட்டி || anjugiramam mp relatives woman murdre what reason police interview
Logo
சென்னை 28-11-2015 (சனிக்கிழமை)
அஞ்சுகிராமம் அருகே எம்.பி. உறவுப்பெண் கொலைக்கு காரணம் என்ன? போலீஸ் சூப்பிரண்டு பேட்டி
அஞ்சுகிராமம் அருகே எம்.பி. உறவுப்பெண் கொலைக்கு காரணம் என்ன? போலீஸ் சூப்பிரண்டு பேட்டி
அஞ்சுகிராமம், ஜூலை.17-
 
அஞ்சுகிராமம் தோப்பூரை சேர்ந்த ஜார்ஜ் எட்வர்டு என்பவரது மனைவி பேபி ஜார்ஜ்(வயது 55). ஹெலன் டேவிட்சன் எம்.பி.யின் உறவினரான பேபி நேற்று முன்தினம் படுகொலை செய்யப்பட்டார். வீட்டில் தனியாக இருந்த அவரை, கழுத்தை அறுத்து கொலை செய்த மர்மநபர்கள் 32 பவுன் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
 
கொலையாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ் குமார் உத்தரவிட்டார். மேலும் அவரே நேரடியாக அஞ்சு கிராமத்தில் முகாமிட்டு வழக்கு விசாரணையை துரிதப்படுத்தினார்.  
 
2-வது நாளாக நேற்று இரவும் அஞ்சுகிராமம் போலீஸ் நிலையத்திற்கு சென்ற அவர் வழக்கின் நிலையை கேட்டறிந்ததோடு விசாரணையை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்வது குறித்தும் தனிப்படையினருடன் ஆலோசனை நடத்தினார். இதற்கிடையே பேபியின் வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்ற அதே பகுதியை சேர்ந்த 2 பெண்கள், வீட்டு வேலைக்கு வந்து சென்றவர்கள், உள்ளூர் ரவுடிகள் என 15 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
 
அதோடு, அஞ்சுகிராமம் பகுதியை சேர்ந்த பழைய கொள்ளையர்கள், கொலை வழக்கில் சிக்கியவர்கள் என 15 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர்களது கைரேகைகளும் பதிவு செய்யப்பட்டு கொலை நடந்த இடத்தில் பதிவான கைரேகைகளுடன் ஒப்பிட்டு பார்க்கப்பட்டது.  
 
பேபியை பற்றி நன்கு அறிந்த யாரேனும் கூலிப்படையை ஏவி இந்த கொலையை செய்திருக்கலாம்? எனவும் சந்தேகிக்கப்படுகிறது. அப்படி கொலை செய்வதற்கு முன் விரோதம் எதுவும் உள்ளதா? அல்லது கொள்ளையடிக்க வந்தவர்கள் மாட்டிக் கொள்ளாமல் இருக்க பேபியை கொலை செய்தார்களா? என பல்வேறு கோணங்களில் விசாரிக்கின்றனர்.
 
பேபிஜார்ஜ் செல்போனுக்கு கடைசியாக வந்த போன் அழைப்புகள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் அதே பகுதியை சேர்ந்த சிலர் திடீரென தலைமறைவாகி இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் எங்கிருக்கிறார்கள்? என போலீசார் விசாரித்து வருகிறார்கள். இன்று உடல் அடக்கம் முடிந்ததும் பேபியின் நெருங்கிய உறவினர்கள் சிலரிடம் விசாரணை நடத்தவும் போலீசார் திட்டமிட்டு உள்ளனர்.  
 
வழக்கு விசாரணை குறித்து போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ் குமார் கூறியதாவது:-
 
பேபி ஜார்ஜ் கொலை தொடர்பாக 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இதுவரை 25-க்கும் மேற்பட்டோரிடம் விசாரிக்கப்பட்டுள்ளது. அஞ்சுகிராமம் பகுதியை சேர்ந்த பழைய குற்றவாளிகளிடம் விசாரித்து வருகிறோம். பேபி ஜார்ஜ் குடும்பத்திற்கு முன்விரோதம் ஏதேனும் இருந்ததா? கொள்ளையர்கள்தான் இந்த கொலையை செய்தார்களா? என பல கோணங்களில் தீவிரமாக விசாரித்து வருகிறோம்.
 
இவ்வாறு அவர் கூறினார்.  
 
பேபியின் உடல் நேற்று ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை முடிந்து குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. வெளிநாட்டில் இருந்து பேபியின் கணவர் ஜார்ஜ் எட்வர்ட் இன்று ஊருக்கு வருவார் என்றும், மாலை பேபியின் உடல் அடக்கம் நடைபெறும் என்றும் அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.  
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Newbharath.gif


O
P
E
N

close

அண்மை - மாநிலச்செய்திகள்

section1

சீர்காழி அருகே கோவில் விழாவில் கோஷ்டி மோதல்

சீர்காழி, பிப். 8–சீர்காழி ஈசானி தெருவில் உள்ள வடபாதி மாரியம்மன் கோவிலில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் ....»