சிக்கிம் தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு: போக்குவரத்து துண்டிப்பு || Sikkim cut off landslide
Logo
சென்னை 26-07-2014 (சனிக்கிழமை)
சிக்கிம் தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு: போக்குவரத்து துண்டிப்பு
சிக்கிம் தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு: போக்குவரத்து துண்டிப்பு
கேங்டாக், ஜூலை 17-

மேற்கு வங்காள எல்லையில் சிக்கிமுக்கு செல்ல வேண்டிய முக்கிய சாலையான தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு ஏற்பட்ட நிலச்சரிவால் சிக்கிம் செல்வதற்கான போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டுள்ளது.

மேற்கு வங்காளத்திலிருந்து சிக்கிம் மாநிலத்திற்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலையான NH 31-ல் மேற்கு வங்காள எல்லையில் தர்கோலா என்னுமிடத்தில் நேற்று இரவு 11 மணிக்கு நிலச்சரிவு ஏற்பட்டது.

மேற்கு வங்காளத்தின் மெல்லி என்ற இடத்திற்கும் சிக்கிமின் ரன்க்போ என்னுமிடத்திற்கும் இடையில் ஏற்பட்ட இந்த நிலச்சரிவால் சிக்கிம் செல்லும் அனைத்து வாகனங்களும் நிறுத்தப்பட்டுள்ளன.

உடனடியாக மீட்பு பணிகளில் இறங்கியுள்ள மீட்புக்குழுவினர் நிலச்சரிவால் ஏற்பட்டுள்ள சேறு மற்றும் சகதிகளை அப்புறப்படுத்தி வருகின்றனர். இன்று மாலைக்குள் போக்குவரத்து தொடங்குவதற்கு ஏற்றவாறு ஒருவழிப்பாதை ஏற்படுத்தப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

மலைப்பகுதியால் சூழப்பட்டுள்ள சிக்கிமிற்குள் செல்வதற்கு, டார்ஜிலிங் மாவட்டத்திலுள்ள மிகக்குறுகலான சாலை வழியாக வாகனங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன.

கடந்த இரு வாரங்களாக சிக்கிம் மற்றும் மேற்கு வங்காள எல்லைப்பகுதியில் பெய்து வரும் கனமழையால் இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தேசியச்செய்திகள்

section1

கார்கில் நினைவு தினம்: பிரதமர் மோடி வாழ்த்து

புதுடெல்லி, ஜூலை. 26–கார்கில் போர் வெற்றியின் 15–வது ஆண்டு நினைவு தினம் இன்று நாடு முழுவதும் ....»