தஞ்சையில் குளிர்பான பாட்டிலில் கிடந்த பிளாஸ்டிக் வளையம் || tanjore cooldrinks bottle plastic ring
Logo
சென்னை 31-07-2015 (வெள்ளிக்கிழமை)
  • இந்தியா - வங்கதேசம் எல்லை ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகிறது
  • பவானி சாகர் அணையில் இருந்து இன்று தண்ணீர் திறப்பு
  • வடசென்னை அனல்மின் நிலைய முதல் நிலையின் 3-வது அலகில் மின் உற்பத்தி பாதிப்பு
  • தங்கம் விலை பவுனுக்கு ரூ. 136 குறைந்தது
  • லலித்மோடி விவகாரம், வியாபம் ஊழல்: டெல்லி மேல்சபையில் காங்கிரஸ் அமளி
  • தர்மபுரி: கோபிநாதம்பட்டி ஸ்ரீராம் நகரில் உள்ள கோயிலில் 110 சவரன் நகை கொள்ளை
  • காஞ்சிபுரத்தில் 2010-ம் ஆண்டு கோயிலில் சுப்ரமணியம் என்பவர் கொலை வழக்கு: 5பேருக்கு ஆயுள் தண்டனை
  • அப்துல் கலாம் பிறந்த நாளை இளைஞர் எழுச்சி தினமாக கொண்டாடப்படும்: முதல்-அமைச்சர் ஜெயலலிதா
  • குடியரசு தினத்தன்று அப்துல் கலாம் பெயரில் விருது வழங்கப்படும்: ஜெயலலிதா
தஞ்சையில் குளிர்பான பாட்டிலில் கிடந்த பிளாஸ்டிக் வளையம்
தஞ்சையில் குளிர்பான பாட்டிலில் கிடந்த பிளாஸ்டிக் வளையம்
தஞ்சாவூர்,ஜுலை.17-
 
தஞ்சை நகர் சுற்றுலா தலமாக விளங்குவதால் தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இதையொட்டி ஆங்காங்கே உள்ள ஓட்டல்கள் மற்றும் கடைகளில் உள்ள குளிர்பானங்களை வாங்கி அருந்துகின்றனர்.
 
தற்போது தஞ்சை நகரில் போலி குளிர்பானங்கள் அதிகம் நடமாடுவதாக புகார்கள் எழுந்துள்ளது. முறையான பதிவு இல்லாமலும் மேலும் பாட்டில்களில் நிறுவனத்தின் பெயர் மற்றும் பயன்படுத்தும் காலகெடு உள்ளிட்டவை எதையும் குறிப்பிடாமல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
 
இதேபோல் குடிநீர் பாட்டில், பாக்கெட்டுகள் தஞ்சை புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம் ஆகிய இடங்களில் விற்பனை செய்யப்படுகிறது.
வெளியூர்களில் இருந்து வரும் பயணிகள் அவசர தேவைக்காக ரூ.2 கொடுத்து குடிநீர் பாக்கெட்டை வாங்குகின்றனர்.
 
அந்த குடிநீர் பாக்கெட்டுகளில் பயன்படுத்தும் காலக்கெடு, தயாரிப்பு தேதி உள்ளிட்டவைகளை குறிப்பிடாமல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவைகள் சுத்திகரிக்கப்பட்ட சுத்தமான குடிநீராப என்பதை பற்றி பொதுமக்களும் கவலைப்படாமல் வாங்கி குடிக்கின்றனர்.
 
இதை கண்காணிக்க வேண்டிய சுகாதாரத்துறை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர்கள் திடீரென்று ஆய்வு நடத்தி போலி குளிர்பானங்கள் மற்றும் குடிநீர் பாக்கெட், பாட்டில்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்று தஞ்சை நகர மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
தற்போது குளிர்பான பாட்டிலில் பிளாஸ்டிக் வளையம் கிடந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை காமராஜர் மார்கெட் அருகே உள்ள ஒரு குளிர்பான கடையில் வெளியூர் பயணி ஒருவர் குளிர்பானம் வாங்கினார். அப்போது பாட்டிலை பார்த்த அவர் அதிர்ச்சி அடைந்தார். பாட்டிலில் வட்டவடிவிலான பிளாஸ்டிக் கிடந்தது.
 
திறக்கப்படாத அந்த பாட்டிலில் பிளாஸ்டிக் பொருள் கிடந்ததால் அந்த பயணி கடும் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் கடைக்காரரிடம் அந்த பாட்டிலை கொடுத்து விட்டு கோபத்துடன் சென்றுவிட்டார். தாகத்தை தணிக்க நினைத்து வந்த அந்த வெளியூர் பயணி கோபத்தை சுகாதாரத்துறை அதிகாரிகள்தான் தணிக்க வேண்டும்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தஞ்சாவூர்

section1

கோர்ட்டில் ஆஜர் ஆகாத தே.மு.தி.க. பேச்சாளருக்கு பிடிவாரண்டு: தஞ்சை கோர்ட்டு உத்தரவு

தஞ்சாவூர், ஜூலை 31–தஞ்சை மாவட்டம் கபிஸ்தலத்தில் தே.மு.தி.க. பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் விருகம்பாக்கம் தொகுதி தே.மு.தி.க. ....»

MM-TRC-B.gif