கும்பகோணம் அருகே நடுரோட்டில் மதுபாட்டில்களை உடைத்து பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம் || kumbakonam pmk protest wine bottle damaged
Logo
சென்னை 25-10-2014 (சனிக்கிழமை)
கும்பகோணம் அருகே நடுரோட்டில் மதுபாட்டில்களை உடைத்து பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்
கும்பகோணம் அருகே நடுரோட்டில் மதுபாட்டில்களை உடைத்து பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்
கும்பகோணம், ஜுலை.17-
 
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமுல் படுத்தக்கோரி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் இன்று டாஸ்மாக் கடைக்கு பூட்டு போடும் போராட்டம் நடந்தது. கும்பகோணம் அருகே பந்தநல்லூர் கடை வீதியில் பா.ம.க. சார்பில் டாஸ்மாக் கடைக்கு பூட்டு போடும் போராட்டம் இன்று நடந்தது. மாநில துணைப்பொதுச்செயலாளர் கோ.ஆலய மணி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் கலியமூர்த்தி உள்பட பா.ம.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
 
போராட்டத்தின் போது பா.ம.க.வினர் டாஸ்மாக் மது பாட்டில்களை நடுரோட்டில் வரிசையாக வைத்து அடித்து நொறுக்கினார்கள். அப்போது அங்கு பாதுகாப்பு நின்ற போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இதேபோல் ரோட்டில் சென்ற பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்து அலறி அடித்து ஓட்டம்பிடித்தனர்.
பா.ம.க.வினரின் இந்த நூதன போராட்டத்தால் பந்தநல்லூர் பகுதியில் இன்று பரபரப்பு ஏற்பட்டது. 
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தஞ்சாவூர்

Maalaimalar.gif
Maalaimalar.gif