கடையநல்லூர் அருகே தோட்டத்தில் புகுந்து யானைகள் அட்டகாசம்: குட்டி யானை தொட்டிக்குள் விழுந்ததால் கூட்டமாக திரண்டன || kadaiyanallur garden enter elephant baby elephanr tank fell down crowd rallied
Logo
சென்னை 20-09-2014 (சனிக்கிழமை)
கடையநல்லூர் அருகே தோட்டத்தில் புகுந்து யானைகள் அட்டகாசம்: குட்டி யானை தொட்டிக்குள் விழுந்ததால் கூட்டமாக திரண்டன
கடையநல்லூர் அருகே தோட்டத்தில் புகுந்து யானைகள் அட்டகாசம்: குட்டி யானை தொட்டிக்குள் விழுந்ததால் கூட்டமாக திரண்டன
கடையநல்லூர், ஜூலை. 17-
 
கடையநல்லூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் முந்தல்காடு என்ற இடம் உள்ளது. இந்தபகுதி மலை அடிவாரத்தில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் தென்னை, வாழை தோட்டங்கள் உள்ளன. இந்த தோட்டங்களில் வன விலங்குகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வந்தன.
 
இதையடுத்து கடந்த ஆட்சியில் 30 கி.மீ. தூரம் சோலார் மின் வேலி அமைக்கப்பட்டது. இந்த மின் வேலி அடிக்கடி பழுதாகி சரியாக செயல்படாததால் தொடர்ந்து வன விலங்குகள் அட்டகாசம் செய்து வந்தன.
 
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 8 யானைகள் கொண்ட கூட்டம் மலைக்குள் இருந்து தோட்டப்பகுதிக்குள் இறங்கியது. அந்த கூட்டத்தில் ஒரு குட்டி யானையும் இருந்தது. இந்த யானைகள் மேலகடைய நல்லூரை சேர்ந்த கணேசன் என்பவரது தென்னந்தோப்பில் தென்னைகளை வேரோடு பிடுங்கி எறிந்தன. குறும்பைகளை பிய்த்து தின்றன. அதே பகுதியில் உள்ள ராமர் பாண்டியன் என்பவரது வாழைத்தோட்டத்தில் புகுந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழைகளையும் யானைகள் சேதப்படுத்தின. அப்போது கணேசனின் தோட்டத்தில் இருந்த தண்ணீர் தொட்டிக்குள் குட்டி யானை தவறி விழுந்தது. இதனால் அந்த குட்டி யானை பிளிறியது. சத்தம் கேட்டு மற்ற யானைகள் அங்கு திரண்டன.
 
குட்டி யானையை தொட்டியில் இருந்து வெளியே கொண்டு வரும் முயற்சியில் யானைகள் ஈடுபட்டன. விடிய விடிய போராடி குட்டி யானையை மீட்க முயன்றது. பின்னர் ஒரு வழியாக தொட்டியில் இருந்த குடிநீரை உறிஞ்சு வெளியேற்றி குட்டி யானையை மீட்டன.
 
இன்று காலை வழக்கம் போல் விவசாயிகள் தோட்டத்துக்கு சென்றனர். அப்போது யானைகள் அங்கு கூட்டமாக நிற்பதை கண்டும், பயிர்களை நாசம் செய்திருப்பதை பார்த்தும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் விவசாயிகள் திரண்டு வெடி வெடித்து யானைகளை விரட்டினர். எனினும் யானைகள் காட்டுக்குள் செல்லாமல் அங்கேயே நின்றன.
 
இதுபற்றி வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. வன அதிகாரி வெள்ளதுரை தலைமையில் வன காவலர்கள் திரண்டு வந்து யானைகளை காட்டுக்குள் விரட்டினர். தொடர்ந்து இப்பகுதியில் வன விலங்குகளால் பயிர்கள் சேதம் அடைவதை தடுக்க சோலார் மின் வேலியை தவிர்த்து மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என்கின்றனர் விவசாயிகள்.
 
இதுபற்றி விவசாயி சுப்பையா பாண்டியன் என்பவர் கூறியதாவது:-
 
இப்பகுதியில் சோலார் மின் வேலி சரியாக செயல்பட வில்லை. வனப்பகுதிகளை ஒட்டி தனியார் காற்றாலைகள் உள்ளன. இரவில் இந்த காற்றாலை சத்தத்தில் வன விலங்குகள் திசைமாறி தோட்டபகுதிக்குள் புகுந்துவிடுகின்றன. எனவே இந்த பிரச்சினைக்கு மாற்று ஏற்பாடு மூலம் தீர்வு காண வேண்டும்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - மாநிலச்செய்திகள்

section1

சீர்காழி அருகே கோவில் விழாவில் கோஷ்டி மோதல்

சீர்காழி, பிப். 8–சீர்காழி ஈசானி தெருவில் உள்ள வடபாதி மாரியம்மன் கோவிலில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் ....»