Logo
சென்னை 24-05-2013 (வெள்ளிக்கிழமை)
தஞ்சை ரெயிலடி அருகே கோரிக்கை பேட்ஜ் அணிந்து மஸ்தூர் யூனியன் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தஞ்சை. ஜுலை. 17-
 
தஞ்சை ரெயிலடி அருகே கோரிக்கை பேட்ஜ் அணிந்து ரெயில்வே மஸ்தூர் சங்கத்தினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். என்ஜினீயரிங் கமிட்டி பரிந்துரையை உடனே வெளியிட கோரியும், பதவி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ரெயில்வே மஸ்தூர் யூனியன் சார்பில் தஞ்சை கோட்ட ரெயில்வே அலுவலக மேலாளர் அலுவலகம் முன்பு இன்று கோரிக்கைகள் அடங்கிய பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
 
ஆர்ப்பாட்டத்துக்கு தலைவர் பாலசுப்பிர மணியன் தலைமை தாங்கினார்.
இதில் செயலாளர் ராமலிங்கம், உதவி தலைவர் ராஜா, உதவி செயலாளர் மனோகரன், பொருளாளர் பிலோமின்ராஜ் மற்றும் உதவி செயலாளர்கள் செல்வராஜன், தாமரை செல்வன், சீனிவாசன், தேவதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

O
P
E
N

close

அண்மை - தஞ்சாவூர்

section1

தஞ்சை ரெயிலடியில் மாதக்கணக்கில் செயல்படாத வங்கி ஏ.டி.எம்.மையம்: பொதுமக்கள் பாதிப்பு

தஞ்சை ரெயில் நிலையத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான வெளிïர் பயணிகள் வருகின்றனர். இதனால் காலை, மாலை, மற்றும் ....»

Recommendations
Recent Activity