நெல்லை அருகே எல்.கே.ஜி. மாணவியிடம் பள்ளி காவலாளி சில்மிஷம்: பொதுமக்கள் சாலை மறியல் || nellai lkg student school watchman harassment public blockade
Logo
சென்னை 12-02-2016 (வெள்ளிக்கிழமை)
நெல்லை அருகே எல்.கே.ஜி. மாணவியிடம் பள்ளி காவலாளி சில்மிஷம்: பொதுமக்கள் சாலை மறியல்
நெல்லை அருகே எல்.கே.ஜி. மாணவியிடம் பள்ளி காவலாளி சில்மிஷம்: பொதுமக்கள் சாலை மறியல்
நெல்லை, ஜூலை. 17-
 
பாளை தெற்கு பஜார் பகுதியில் தனியார் மெட்ரிக் பள்ளி ஒன்று உள்ளது. இங்கு ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். நேற்று அங்கு படித்து வரும் எல்.கே.ஜி. மாணவி திடீரென வகுப்பறையில் சிறுநீர் கழித்துவிட்டாள். இதையடுத்து பள்ளி காவலாளி சண்முகவேல் அந்த மாணவியை கழிப்பறைக்கு அழைத்து சென்று தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்தார்.
 
அப்போது அவர் மாணவியிடம் சில்மிஷம் செய்தாராம். இதையடுத்து மாலை வீட்டிற்கு சென்ற மாணவி காவலாளி சில்மிஷம் செய்தது குறித்து பெற்றோரிடம் அழுதுகொண்டே கூறினாள். இதைத்தொடர்ந்து மாணவியின் பெற்றோர் பள்ளிக்கு வந்து முறையிட்டனர். ஆனால் பள்ளி நிர்வாகம் காவலாளி மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
 
இந்த நிலையில் இன்று காலை காவலாளி மற்றும் பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க கோரி சமாதானபுரத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர், மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
 
தகவல் அறிந்ததும் பாளை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது காவலாளி மீது புகார் கொடுக்குமாறு போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து மாணவியின் தந்தை முகமது அசன் பாளை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த மறியலின் போது பாதிக்கப்பட்ட மாணவியின் தாய் ஆயிஷா திடீரென்று மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Banner.gif


O
P
E
N

close

அண்மை - மாநிலச்செய்திகள்

section1

கண்ணமங்கலம் அருகே செம்மரக்கடத்தல் தரகர்கள் 4 பேர் கைது

கண்ணமங்கலம், பிப்.12–திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலை பகுதியை சேர்ந்த தொழிலாளர்கள் பலர் செம்மரம் வெட்டி கடத்துவதற்காக ஆந்திரமாநிலத்திற்கு ....»

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif