தஞ்சையில் டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து 233 மதுபாட்டில்கள் கொள்ளை || tanjore tasmac shop lock broke then bottle abducted
Logo
சென்னை 25-11-2015 (புதன்கிழமை)
தஞ்சையில் டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து 233 மதுபாட்டில்கள் கொள்ளை
தஞ்சையில் டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து 233 மதுபாட்டில்கள் கொள்ளை
தஞ்சாவூர்,ஜுலை.17-
 
தஞ்சை விளார் பைபாஸ் ரோட்டில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது. இதன் சூப்பிரவைசராக கருணாநிதி என்பவர் இருந்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக் கம்போல, கடையை பூட்டி விட்டு சென்றார். பின்னர் நேற்று காலை கடையை திறக்க வந்த போது கடையின் 2 பூட்டுகளும் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு கருணாநிதி அதிர்ச்சி அடைந்தார்.
 
கடையில் சென்று பார்த்தபோது அங்கிருந்த 233 மதுபாட்டில்களை கொள் ளையர்கள் திருடி சென்றுள்ளது தெரிய வந்தது. பணம் எதுவும் கடையில் வைக்காதால் தப்பியது. திருட்டு போன 233 மதுபாட்டில்களின் மதிப்பு ரூ.22 ஆயிரம் ஆகும்.
 
இதுபற்றி தஞ்சை தாலுகா போலீசில் சூபிபிரவைசர் கருணாநிதி புகார் செய்தார்.அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
தஞ்சையில் உள்ள மாதாக்கோட்டையில் அரசு மதுக்கடை இயங்கி வருகிறது. இதில் வேலைபார்க்கும் ஊழியர்கள் வழக்கம் போல் இரவு 10 மணிக்கு கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றனர். அவர்கள் சென்ற அடுத்த சில நிமிடங்களிலேயே கொள்ளளையர்கள் மதுக்கடையில் உள்ள பூட்டை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
 
 அப்போது அந்த வழியாக சென்ற பொதுமக்கள் சிலர் டாஸ்மாக் கடை திறந்து கிடப்பதை பார்த்து அங்கு சென்றனர். அவர்களை பார்த்தவுடன் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்கள் கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
 
இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறுகை யில்:- இரவு 10 மணிக்கு மேல் அந்த பகுதியில் போலீசார் ரோந்து வருவது கிடையாது. இதனால் தான் தஞ்சை தமிழ் பல்கலைக் கழகத்தை சுற்றியுள்ள ஊர்களில் அடிக்கடி கடைகளில் பூட்டை உடைக்கும் சம்பவங்களும் செயின் பறிப்பு சம்பவங்களும் நடைபெறுகிறது.
 
எனவெ போலீசார் ரோந்து பணியை தீவிரபடுத்த வேண்டும் என்று கூறினர்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Newbharath.gif


O
P
E
N

close

அண்மை - சென்னை

section1

சென்னையில் இருந்து நெல்லைக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கம்

பயணிகள் கூட்ட நெரிசலை சமாளிக்கும் வகையில் சென்னை-திருநெல்வேலி வழித்தடத்தில் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இதுபற்றி தெற்கு ரெயில்வே ....»