துபாயில் இறந்த தமிழக மீனவர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம்: ஜெயலலிதா அறிவிப்பு || dubai dead tamilnadu fishermen family fund jayalalitha
Logo
சென்னை 14-02-2016 (ஞாயிற்றுக்கிழமை)
துபாயில் இறந்த தமிழக மீனவர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம்: ஜெயலலிதா அறிவிப்பு
துபாயில் இறந்த தமிழக மீனவர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம்: ஜெயலலிதா அறிவிப்பு
சென்னை, ஜூலை 17-

துபாயில் அமெரிக்க கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழக மீனவர் சேகரின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

துபாய் நாட்டில் உள்ள ஜபேல் அலி துறைமுகம் அருகில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அமெரிக்க கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஏ. சேகர் என்ற மீனவர் உயிரிழந்தார் என்றும், மூன்று மீனவர்கள் காயமடைந்தனர் என்றும் செய்தி கேட்டு நான் மிகுந்த வருத்தமுற்றேன்.

இந்தத் துயரச் சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு, மீனவர்களுக்கு உரிய நிவாரணம் அளிக்கப்பட வேண்டும் என்று பிரதமருக்கு நான் கடிதம் எழுதியுள்ளேன்.

மேலும், இந்தத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்த ஏ.சேகரின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் துயரச் சம்பவத்தில் காயமடைந்த எம். பாண்டுவநாதன், கே. முத்துக்கண்ணன் மற்றும் ஆர்.முத்துமணிராஜ், ஆகியோர் விரைவில் பூரண குணமடைய வேண்டும் என்ற என் விருப்பத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிரிழந்த மீனவர் சேகரின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ஐந்து லட்சம் ரூபாய் வழங்கவும், காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாய் வழங்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Banner.gif


O
P
E
N

close

அண்மை - சென்னை

section1

ஸ்ரீரங்கத்தில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே ரூ.75 கோடி செலவில் புதிய பாலம்: ஜெயலலிதா திறந்து வைத்தார்

சென்னை, பிப்.14–தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:– ஒரு மாநிலத்தின் சமூக மற்றும் பொருளாதார ....»

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif