சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் ரூ.5 லட்சம் கொள்ளை || rs 5 lakhs robbery from printer man house near sivakasi
Logo
சென்னை 10-02-2016 (புதன்கிழமை)
சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் ரூ.5 லட்சம் கொள்ளை
சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் ரூ.5 லட்சம் கொள்ளை
சிவகாசி, ஜூலை.17-
 
விருதுநகர் மாவட்டம் சிவகாசி பள்ளபட்டி ரோட்டில் அச்சகம் நடத்தி வருபவர் ஜகாங்கீர். இவரது வீடு விசாலாட்சி நகரில் உள்ளது. ஜகாங்கீர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் சேலத்தில் உள்ள மகள் வீட்டுக்கு சென்று இருந்தார்.
 
இதை அறிந்த மர்ம ஆசாமிகள் இரவில் வீட்டின் பின்பக்க ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அங்குள்ள பீரோவை உடைத்து அதில் இருந்த ரூ.5 லட்சம் மற்றும் 4 1/2 பவுன் நகைகளை கொள்ளையடித்து விட்டு சென்று விட்டனர்.
 
நேற்று இரவு ஜகாங்கீர் வீட்டுக்கு வந்தார். அப்போது ஜன்னல் உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த பணம்-நகை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.
 
இதுகுறித்து அவர் சிவகாசி கிழக்கு போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
 
மேலும் இந்த கொள்ளையில் துப்பு துலக்க மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு மோப்பம் பிடிக்கப்பட்டது. கொள்ளையர்களை போலீசார் தேடி வருகிறார்கள். அச்சக அதிபர் வீட்டில் நகை-பணம் கொள்ளை யடிக்கப்பட்ட சம்பவம் சிவகாசியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Banner.gif


O
P
E
N

close

அண்மை - விருதுநகர்

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif