கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி 10 நர்சிங் மாணவிகளுக்கு திடீர் வயிற்று போக்கு: ஆஸ்பத்திரியில் அனுமதி || kilpaukkam medical college nurse sunnde vommit admited hospital
Logo
சென்னை 28-07-2015 (செவ்வாய்க்கிழமை)
கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி 10 நர்சிங் மாணவிகளுக்கு திடீர் வயிற்று போக்கு: ஆஸ்பத்திரியில் அனுமதி
கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி 10 நர்சிங் மாணவிகளுக்கு திடீர் வயிற்று போக்கு: ஆஸ்பத்திரியில் அனுமதி
சென்னை, ஜூலை.17-
 
சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி வளாகத்தில் நர்சிங் பயிற்சி பள்ளியும் செயல்படுகிறது. அங்கு 300 மாணவிகள் 3 ஆண்டு டிப்ளமோ நர்சிங் தங்கி படித்து வருகி றார்கள். அங்குள்ள விடுதியில் அவர்களுக்கு உணவு தயாரிக்கப்பட்டு வழங்கப்படுகிறது.
 
நேற்று முன்தினம் இரவு 10 மாணவிகளுக்கு திடீரென வயிற்று போக்கு, வாந்தி ஏற்பட்டது. உடனடியாக அவர்கள் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது.
 
இதுகுறித்து மருத்து வகல்லூரி முதல்வர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-
 
நர்சிங் கல்லூரியில் 300 மாணவிகள் தங்கி படித்து வருகிறார்கள். ஆனால் 10 பேருக்கு மட்டுமே வயிற்று போக்கு ஏற்பட்டுள்ளது. அன்று இரவு சாப்பிட்ட உணவினால் வாந்தி- பேதி ஏற்பட்டு இருக்க வாய்ப்பு இல்லை. அப்படியானால் அனைத்து மாணவிகளுக்கும் அந்த பாதிப்பு இருந்திருக்கும்.
 
பாதிக்கப்பட்ட மாணவிகளின் தட்டு, டம்ளர் போன்றவை சுத்தமாக கழுவி வைத்திருந்தார்களா? சுகாதார மற்ற உணவால் மட்டுமல்ல பாத்திரங்களாலும் வயிற்று போக்கு ஏற்படலாம்.
 
சுகாதார ஆய்வாளர் கல்லூரி பேராசிரியர் ஆகியோர் விடுதியில் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். ஈ, கொசுக்களை ஒழிக்கவும் போதிய அளவு குடிநீரில் குளோரின் கலக்கப்பட்டுள்ளதா? என்றும் ஆய்வு செய்யப்படுகிறது. போதுமான தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
 
இவ்வாறு அவர் கூறினார்.
 
நர்சிங் மாணவிகளுக்கு நேற்று தேர்வு நடைபெற்றது. அந்த தேர்வை வயிற்று போக்கு பாதித்த 10 மாணவிகளும் எழுதவில்லை.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - சென்னை

section1

ஆயிரம் விளக்கில் ரவுடி மர்மச்சாவு

சென்னை, ஜூலை. 28–சென்னை, ஆயிரம் விளக்கு ரங்கூன் தெருவில் வசித்து வந்தவர் கண்ணன் (வயது 32). ....»

MM-TRC-B.gif