திருச்சி, மதுரையில் இருந்து செல்லும் திண்டுக்கல் பயணிகள் ரெயில் 3 நாட்கள் ரத்து: தெற்கு ரெயில்வே அறிவிப்பு || trichy madurai dindukal passengers 3 days canceled southern railway announce
Logo
சென்னை 04-07-2015 (சனிக்கிழமை)
  • ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வு முடிவு இன்று வெளியீடு
  • விழுப்புரம் அருகே தனியார் பஸ் விபத்து: 4 பேர் பலி
  • கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி: பெரு அணி வெற்றி
  • ஜெயலலிதா இன்று எம்.எல்.ஏ.ஆக பதவி ஏற்கிறார்
  • வரலாற்று சிறப்புமிக்க பயணம்: வெற்றிகரமாக முடித்து ஹவாய் தீவில் தரையிறங்கியது சூரிய ஒளி விமானம்
திருச்சி, மதுரையில் இருந்து செல்லும் திண்டுக்கல் பயணிகள் ரெயில் 3 நாட்கள் ரத்து: தெற்கு ரெயில்வே அறிவிப்பு
திருச்சி, மதுரையில் இருந்து செல்லும் திண்டுக்கல் பயணிகள் ரெயில் 3 நாட்கள் ரத்து: தெற்கு ரெயில்வே அறிவிப்பு
திருச்சி, ஜூலை 17-  
 
தெற்கு ரெயில்வே திருச்சி கோட்ட மக்கள் தொடர்பு அலுவலர் எம்.கே.கோபிநாத் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-    
 
திண்டுக்கல்-பொள்ளாச்சி இடையே மீட்டர் கேஜ் ரெயில்பாதையை அகல ரெயில் பாதையாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக திண்டுக்கல் ஜங்சனில் ஒருங்கிணைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.  
 
இதையயொட்டி திருச்சி-திண்டுக்கல், மதுரை-திண்டுக்கல் இடையிலான பயணிகள் ரெயில் 3 நாட்கள் ரத்து செய்யப்பட உள்ளன. ரத்து செய்யப்படும் ரெயில்கள் விவரம்:-
 
திருச்சியில் இருந்து மாலை 6.20 மணிக்கு புறப்பட்டு, இரவு 8.55 மணிக்கு திண்டுக்கல் சென்றடையும் திருச்சி-திண்டுக்கல் பயணிகள் ரெயில் (வண்டி எண் 56703) ஜூலை 17 முதல் 19 வரை ரத்து செய்யப்படுகிறது.
 
திண்டுக்கல்லில் இருந்து காலை 6.15 மணிக்கு புறப்பட்டு, காலை 8.30 மணிக்கு திருச்சி வந்தடையும் திண்டுக்கல்-திருச்சி பயணிகள் ரெயில் (வண்டி எண் 56704) ஜூலை 18 முதல் 20-ந் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.
 
மதுரையில் இருந்து மாலை 6.10 மணிக்கு புறப்பட்டு, இரவு 7.40 மணிக்கு திண்டுக்கல் சென்றடையும் மதுரை-திண்டுக்கல் பயணிகள் ரெயில் (வண்டி எண் 56708) ஜூலை 17 முதல் 19-ந்தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.
 
திண்டுக்கல்லில் இருந்து காலை 7.55 மணிக்கு புறப்பட்டு 9.10 மணிக்கு மதுரை சென்றடையும் திண்டுக்கல்-மதுரை பயணிகள் ரெயில் (வண்டி எண் 56707) ஜூலை 18 முதல் 20-ந்தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.  
 
பிற ரெயில்கள்:-
 
திண்டுக்கல் வழியாக செல்லும் பிற விரைவு மற்றும் பயணிகள் ரெயில்களும், ஜூலை 17 முதல் 20-ந்தேதி வரை 5 முதல் 30 நிமிடங்கள் வரை தாமதமாக செல்லும்.
 
இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - மாநிலச்செய்திகள்

section1

விழுப்புரத்தில் மாணவியை காதலித்த பஸ் டிரைவரின் கை–கால் துண்டிப்பு: மர்ம கும்பலை பிடிக்க போலீஸ் தீவிரம்

விழுப்புரம், ஜூலை 4–விழுப்புரம் மாம்பழப்பட்டு சாலையை சேர்ந்தவர் செந்தில் (வயது 28).இவர் விழுப்புரம் பகுதியில் ஓடும் ....»