புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள சிலை கடத்தல் மன்னன் கபூர் புற்று நோயால் அவதி || puzhal prison statue smuggler kapoor cancer
Logo
சென்னை 30-11-2015 (திங்கட்கிழமை)
புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள சிலை கடத்தல் மன்னன் கபூர் புற்று நோயால் அவதி
புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள சிலை கடத்தல் மன்னன் கபூர் புற்று நோயால் அவதி
சென்னை, ஜூலை. 17-

விழுப்புரம் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே உள்ள ஸ்ரீபுரந்தாள் பிரகதீஸ்வரர் கோவிலில் கடந்த 2008-ம் ஆண்டு மார்ச் 21-ந்தேதி 8 ஐம்பொன் சிலைகள் திருட்டு போனது.

அதேபோல, அரியலூர் மாவட்டம் உடையார் பாளையத்தை அடுத்த ஜமீன் சுத்தமல்லி கிராமத்தில் உள்ள பெருமாள் கோவிலிலும் 2008-ம் ஆண்டு ஏப்ரல் 18-ந்தேதி 18 ஐம்பொன் சிலைகள் கொள்ளை போனது.

மேற்கண்ட 2 கோவில்களிலும் திருட்டு போன சிலைகள் அனைத்தும் 12-ம் நூற்றாண்டை சேர்ந்தவை. சிலைகள் திருட்டில் ஈடுபட்ட விருதுநகரைச் சேர்ந்த பார்த்திபன், மதுரையைச் சேர்ந்த ஸ்ரீராம், விழுப்புரத்தைச் சேர்ந்த மாரிசாமி, ராஜபாளையத்தைச் சேர்ந்த பிச்சுமணி ஆகிய 4 பேர் முதலில் சிக்கினர்.

அவர்கள் கொடுத்த தகவலின் பேரில், புதுச்சேரியை சேர்ந்த சஞ்சீவி அசோகன் என்பவர் கேரளாவில் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் தொடர்ச்சியாக சர்வதேச சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் சந்திரகபூர் கைது செய்யப்பட்டார்.

வெளிநாட்டில் கைது செய்யப்பட்ட கபூர், ஜெயங்கொண்டம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். சுபாஷ் சந்திரகபூருக்கு எதிராக கூட்டுச்சதி, கொள்ளை அடித்தல் உள்ளிட்ட 7 பிரிவுகளில் உடையார்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கு, குற்ற புலனாய்வு துறையின் (சி.ஐ.டி.) சிலை திருட்டு தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. சி.ஐ.டி. பிரிவு போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், அமெரிக்க பிரஜையான சுபாஷ் சந்திரகபூர், 2006-ம் ஆண்டு இந்தியா வந்தார்.

சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் சிறிது காலம் தங்கினார். அங்குதான் அவரும் மற்ற குற்றவாளிகளும் சேர்ந்து ஐம்பொன் சிலைகளை திருடுவதற்கான சதித் திட்டத்தை தீட்டினர்.

முக்கியமாக இந்து கோவில்களில் உள்ள ஐம்பொன் சிலைகளை மட்டுமே திருடுவது என்ற முடிவு செய்தனர். வெளிநாடுகளில் ஐம்பொன் சாமி சிலைகளுக்கு நல்ல கிராக்கி உண்டு. எனவே திருடப்படும் ஐம்பொன் சிலைகளை வெளிநாடுகளில் விற்கும் பொறுப்பை சுபாஷ் சந்திரகபூர் ஏற்றுக்கொண்டார்.

அதன்படி மற்ற குற்றவாளிகள் (கூட்டாளிகள்) கொள்ளை அடித்த ஐம்பொன் சிலைகளை கபூர் விற்பனை செய்து, அதில் கிடைக்கும் பணத்தில் ஒரு பகுதியை கூட்டாளிகளுக்கு கொடுத்தார். பெரும்பகுதி பணத்தை கபூர் வைத்துக் கொண்டார் என தெரியவந்துள்ளது.

தங்கள் காவலில் வைத்து கபூரை விசாரித்தால் மேலும் பல தகவல்கள் கிடைக்கலாம் என்று கருதிய சி.ஐ.டி. போலீசார், அவரை காவலில் வைத்து விசாரிக்க அனுமதிகோரி, ஜெயங்கொண்டம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, பதில் அளிக்க காலஅவகாசம் வேண்டும் என்று கபூர் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. இதை ஏற்று சி.ஐ.டி. போலீசாரின் மனுமீதான மறு விசாரணையை 18-ந்தேதி ஒத்தி வைத்தார்.

இதற்கிடையே புழல் சிறைக்கு கொண்டு செல்லப்பட்ட சுபாஷ்சந்திர கபூரை மத்திய சிறை தலைமை டாக்டர் இ.கதிரவன் உடல் பரிசோதனை செய்தார். ஏற்கனவே புற்றுநோய் மற்றும் சர்க்கரை நோய் பாதிப்புக்கு ஆளான கபூர், சிறையில் அடைக்கப்பட்டதும், அங்குள்ள சூழ்நிலை அவருக்கு அலர்ஜியை ஏற்படுத்தியது.

ஆஸ்துமாவும் சேர்ந்து கொண்டதால், மூச்சு விடுவதற்கு சிரமப்பட்டார். இதிலிருந்து விடுபட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. வெளிநாட்டில் இருந்து வாங்கப்பட்ட மாத்திரைகளை கபூர் சாப்பிட்டு வருகிறார். அவரது உடல் நிலையை டாக்டர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். சிறையில் அவருக்கு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. தனக்குள்ள நோய்களுக்கு உலகில் உள்ள பல்வேறு முன்னணி ஆஸ்பத்திரிகளுக்கு சென்று கபூர் சிகிச்சை எடுத்து வந்துள்ளார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Newbharath.gif


O
P
E
N

close

அண்மை - சென்னை

section1

தேர்தலுக்கு முன் மதுவிலக்கை கொண்டு வர வேண்டும்: தமிழக அரசுக்கு இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் கோரிக்கை

சென்னை, நவ. 30–காந்திய பேரவையின் மாநில தலைவர் குமரி அனந்தன் அகில இந்திய மது விலக்கு ....»

MudaliyarMatrimony_300x100px.gif