பவானி சாகர் அணை: நீர் பிடிப்பு பகுதியில் மழை பெய்ய வேண்டி விவசாயிகள் வழிபாடு || erode bhavani sagar dam farmers need rain water capture prayer
Logo
சென்னை 06-02-2016 (சனிக்கிழமை)
பவானி சாகர் அணை: நீர் பிடிப்பு பகுதியில் மழை பெய்ய வேண்டி விவசாயிகள் வழிபாடு
பவானி சாகர் அணை: நீர் பிடிப்பு பகுதியில் மழை பெய்ய வேண்டி விவசாயிகள் வழிபாடு
பவானிசாகர், ஜூலை. 17-
 
ஈரோடு மாவட்ட மக்களின் தாகத்தை தணித்து வரும் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இப்போது பரிதாபமாக உள்ளது. அணையில் தற்போது 35 அடி தண்ணீர் மட்டுமே உள்ளது. கடல் போல் பரந்து விரிந்து காணப்படும் பவானிசாகர் அணை தற்போது வெட்ட வெளியாக பாலைவனம் போல் காணப்படுகிறது.
 
ஈரோடு மாவட்டத்தில் ஓரளவு மழை பெய்து வந்தாலும் அணைக்கு இந்த மழை தண்ணீர் செல்வது கிடையாது. அணையின் நீர் பிடிப்பு பகுதியான ஊட்டி மலைப்பகுதி, கேரள மாநில எல்லை பகுதியில் மழை பெய்தால்தான் பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரும். மேலும் பவானிசாகர் வனப்பகுதியில் உள்ள தொங்குமரகடா செல்லும் வனத்தில் பலத்த மழை பெய்தாலும் அணைக்கு தண்ணீர் வரும்.  
 
மேற்கண்ட நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ய வேண்டும் என பவானிசாகர் அணை தண்ணீரை நம்பி உள்ள விவசாயிகளும், பொதுமக்களும் தங்களின் இஷ்ட தெய்வத்தை வழிபட்டு வருகிறார்கள். எப்படியும் மழை பெய்யும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் உள்ளனர்.
 
பவானிசாகர் பகுதியை சேர்ந்த விவசாயிகளான மாரிமுத்து, தங்கசாமி, பழனிசாமி, மூர்த்தி ஆகியோர் கூறும் போது, பவானிசாகர் அணையின் இப்போதைய தண்ணீர் இருப்பு எங்களுக்கு கவலை அளிப்பதாக இருந்தாலும் இன்னும் ஓரிரு நாட்களில் கண்டிப்பாக அணையின் நீர் பிடிப்பு பகுதியில் மழை பெய்யும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது என்று கூறினர்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Banner.gif


O
P
E
N

close

அண்மை - ஈரோடு

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif