உத்தரபிரதேசத்தில் பதவியேற்பு விழா கொண்டாட்டத்தில் குண்டு பாய்ந்து சிறுவன் பலி: துப்பாக்கியால் சுட்டவர் கைது || uttarpradesh swom function shot child dean man arrest
Logo
சென்னை 28-11-2015 (சனிக்கிழமை)
உத்தரபிரதேசத்தில் பதவியேற்பு விழா கொண்டாட்டத்தில் குண்டு பாய்ந்து சிறுவன் பலி: துப்பாக்கியால் சுட்டவர் கைது
உத்தரபிரதேசத்தில் பதவியேற்பு விழா கொண்டாட்டத்தில் குண்டு பாய்ந்து சிறுவன் பலி: துப்பாக்கியால் சுட்டவர் கைது
பைரேலி, ஜூலை. 17-
 
உத்தரபிரதேச மாநிலத்தில் சமீபத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடந்தது. தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் நேற்று பதவி ஏற்றனர். மாநிலம் முழுவதும் பதவியேற்பு விழா நடந்ததால் உள்ளாட்சி அலுவலகங்கள் கோலாகலமாக இருந்தன.
 
பைரேலி மாவட்டத்தில் வெற்றி பெற்ற சுயேட்சை வேட்பாளர் ரியாஸ் அன்சாரி மேயராக பதவியேற்கும் விழா நடந்தது. அப்போது அவரது ஆதரவாளர்களில் ஒருவர் கூட்டத்தில் இருந்தபடி வானை நோக்கி இரட்டைக்குழாய் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அப்போது கூட்டத்தில் திடீரென நெரிசல் ஏற்பட்டதால் அவரது துப்பாக்கிக் குண்டு பொதுக் கூட்டத்தில் பாய்ந்தது. கூட்டத்தில் இருந்த 9 வயது சிறுவன் மீது குண்டுகள் பாய்ந்தது.
 
இதில் அந்த சிறுவன் பரிதாபமாக பலியானான். இதனால் பதவியேற்பு விழாவில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். துப்பாக்கியால் சுட்டவர் கைது செய்யப்பட்டார். அவர் மீது பல்வேறு பிரிவு களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தி முதல்-மந்திரிக்கு அறிக்கை அனுப்பி உள்ளார். இதற்கிடையே பதவி ஏற்பு விழாவில் உரிய பாதுகாப்பு செய்யவில்லை என்று 6 போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர். 
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Newbharath.gif


O
P
E
N

close

அண்மை - தேசியச்செய்திகள்

section1

சபரிமலையில் ஐகோர்ட்டு உத்தரவை செயல்படுத்தாத 7 ஓட்டல் உரிமையாளர்களுக்கு ரூ.1.19 லட்சம் அபராதம்

சபரிமலை,நவ.28–சபரிமலை கோவிலில் உள்ள கடைகள் மற்றும் ஓட்டல்களில் விற்கப்படும் பொருட்களின் விலை விவரங்களை பட்டியலிட்டு அட்டவணையை ....»

MudaliyarMatrimony_300x100px.gif