தமிழ் பேசும் நடிகைகளுக்கே வாய்ப்பு தருவேன்: இயக்குனர் சுந்தர்.சி || i will give opportunity to tamil speaking person say director sundar c
Logo
சென்னை 02-04-2015 (வியாழக்கிழமை)
தமிழ் பேசும் நடிகைகளுக்கே வாய்ப்பு தருவேன்: இயக்குனர் சுந்தர்.சி
தமிழ் பேசும் நடிகைகளுக்கே  வாய்ப்பு தருவேன்: இயக்குனர் சுந்தர்.சி
தமிழ் திரையுலகில் இந்தி, மலையாள நடிகைகள் ஆதிக்கம் செலுத்துகின்றனர். இவர்களில் பலருக்கு தமிழ் தெரியாது. மலையாள நடிகைகள் பலர் தமிழ் பேச கற்றுக் கொண்டுள்ளனர். ஆனால் மும்பையில் இருந்து வரும் நடிகைகள் பலருக்கு தமிழ் பேசவும் படிக்கவும் தெரியாது.
 
பட விழாக்களில் இந்த நடிகைகள் தமிழ் தெரியாது என்று சொல்லி விட்டு ஆங்கிலத்தில் பேசும்போது மேடையிலேயே தங்கர்பச்சான், சேரன் போன்ற இயக்குனர்கள் கண்டித்து உள்ளனர். தமிழ் கற்றுக் கொள்ளுங்கள் என்று கூறி அறிவுரையும் வழங்கியுள்ளார்கள்.
 
இந்த நிலையில் இயக்குனர் சுந்தர்.சி தமிழ் பேசும் நடிகைகளையே என் படத்தில் நடிக்க வைப்பேன் என்று கூறியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:-
 
தமிழ் பேசும் நடிகைகளையே என் படங்களில் தேர்வு செய்கிறேன். மொழி தெரியாதவர்களை நடிக்க வைப்பது இல்லை. தமிழ் தெரிந்த நடிகைகளால் மட்டுமே வசனத்தையும் புரிந்து கொண்டு ஈடுபாட்டோடு நடிக்க முடியும். உணர்வுகளையும் வெளிப்படுத்த முடியும். அவர்களை நடிக்க வைப்பதும் எளிதாக இருக்கிறது. மொழி தெரியாதவர்களால் சிறப்பாக நடிக்க முடியாது.
 
இவ்வாறு அவர் கூறினார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - சினிமா செய்திகள்

section1

சினிமாவில் அவரவர் வேலையைப் பாருங்கள்; அடுத்தவர் வேலையைப் பார்க்காதீர்கள்: ராதாரவி

ஹேர் ஸ்டைல் நல்லா இருக்கு. என் அடுத்த படத்தில் பயன்படுத்திக்கிறேன் என்றார். மயிருக்கு உள்ள மரியாதை ....»