2 நாள் பயணத்துக்குப் பிறகு விண்வெளி ஆய்வு மையத்தில் சுனிதா வில்லியம்ஸ் இணைந்தார்: 4 மாதம் தங்கி இருப்பார் || sunitha williams joined research center in space
Logo
சென்னை 26-11-2015 (வியாழக்கிழமை)
2 நாள் பயணத்துக்குப் பிறகு விண்வெளி ஆய்வு மையத்தில் சுனிதா வில்லியம்ஸ் இணைந்தார்: 4 மாதம் தங்கி இருப்பார்
2 நாள் பயணத்துக்குப் பிறகு விண்வெளி ஆய்வு மையத்தில் சுனிதா வில்லியம்ஸ் இணைந்தார்: 4 மாதம் தங்கி இருப்பார்
வாஷிங்டன், ஜூலை.17-
 
அமெரிக்கா, ரஷ்யா உள்பட சில நாடுகள் சேர்ந்து விண்வெளி ஆராய்ச்சிக்காக ஆகாயத்தில் சர்வதேச விண்வெளி மையம் அமைத்துள்ளன. விண்வெளி வீடு என்றழைக்கப்படும் இந்த மையத்தில் பல்வேறு நாட்டு விஞ்ஞானிகள் சுழற்சி முறையில் இருந்து ஆய்வு செய்து வருகிறார்கள்.
 
அமெரிக்காவின் நாசா நிறுவனம் இந்த ஆய்வு மையத்துக்கு இந்திய வம்சாவளி வீராங்கனை சுனிதா வில்லியம்சை அனுப்ப முடிவு செய்தது. அதன்படி நேற்று முன்தினம் ரஷ்யாவின் சோயுஸ் விண்கலம் மூலம் சுனிதா புறப்பட்டார்.
 
கஜகஸ்தான் நாட்டில் இருந்து சென்ற அவருடன் ஜப்பான் விஞ்ஞானி அகிகிகோ மற்றும் ரஷ்யா விஞ்ஞானி யூரி ஆகியோரும் சென்றனர். 2 நாட்கள் பயணத்துக்கு பிறகு அவர்களது விண்கலம் இன்று காலை சர்வதேச விண்வெளி மையத்தை நெருங்கியது. இந்திய நேரப்படி 10.21 மணிக்கு சோயுஸ் விண்கலம் ஆய்வு மையத்தை சென்றடைந்தது.
 
இதையடுத்து சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட மூன்று பேரும் ஆய்வு மையத்துக்குள் சென்றனர். அந்த ஆய்வு மையத்தில் ஏற்கனவே 32 ஆராய்ச்சியாளர்கள் உள்ளனர். அவர்களுடன் சுனிதா வில்லியம்ஸ் குழுவினர் இணைந்தனர். அவர்களை ஆய்வு மையத்தினர் வரவேற்றனர். சுனிதா வில்லியம்ஸ் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு சென்றிருப்பது இது 2-வது முறையாகும்.
 
கடந்த முறை அவர் 6 மாதம் விண்வெளியில் தங்கி இருந்து ஆய்வுப்பணிகளை மேற்கொண்டார். அது இன்றுவரை முறியடிக்கப்படாத சாதனையாக உள்ளது.
 
இந்த நிலையில் இந்த முறை 4 மாதம் தங்கியிருந்து சுனிதா ஆய்வுகள் செய்யவுள்ளார். இந்த காலக் கட்டத்தில் சுனிதா விண்ணில் நடந்து ஆய்வு செய்ய இருக்கிறார். விண்வெளி வீட்டில் இருந்த படி லண்டன் ஒலிம்பிக் போட்டிகளை கண்டுகளிக்க திட்டமிட்டுள்ள அவர் அங்கிருந்தபடி அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க உள்ளார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Newbharath.gif


O
P
E
N

close

அண்மை - உலகச்செய்திகள்

section1

ரஷ்யாவை தொடரும் சோகம்: ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 15 பொதுமக்கள் பலி

ரஷ்யாவை சேர்ந்த ஹெலிகாப்டர் சைபீரியாவில் இன்று விழுந்து நொறுங்கியதில் 15 பொதுமக்கள் பலியானர்கள். இது பற்றி உள்நாட்டு ....»