2ஜி ஒதுக்கீடு: அருண்ஷோரி பதவிக்காலத்தில் எந்த தவறும் நடக்கவில்லை வழக்கை சி.பி.ஐ. கைவிட்டது || 2g spectrum allotement arunshori posting year no scam cbi rejected case
Logo
சென்னை 26-04-2015 (ஞாயிற்றுக்கிழமை)
  • த.மா.கா. தலைவர் வாசன் இன்று டெல்லி செல்கிறார்
  • நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களுக்கு சோனியா, ராகுல்காந்தி இரங்கல்
  • நிலநடுக்கத்தால் துண்டிக்கப்பட்ட தொலைத்தொடர்பு சேவையை சீரமைக்க நடவடிக்கை: ரவிசங்கர் பிரசாத் உத்தரவு
  • நேபாளத்தில் சிக்கித்தவித்த இந்தியர்களை மீட்டது இந்திய விமானப்படை: 500 பேர் தலைநகர் டெல்லி வந்தனர்
  • நிலநடுக்கத்தால் உயிர் இழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ. 2 லட்சம் நிவாரணம்: மத்திய அரசு அறிவிப்பு
  • கோபாலபுரம் வீட்டில் கருணாநிதியுடன் இன்று விஜயகாந்த் திடீர் சந்திப்பு
  • நேபாள நாட்டிற்கு மீண்டும் விமான சேவையை துவக்கியது ஏர் இந்தியா
2ஜி ஒதுக்கீடு: அருண்ஷோரி பதவிக்காலத்தில் எந்த தவறும் நடக்கவில்லை- வழக்கை சி.பி.ஐ. கைவிட்டது
2ஜி ஒதுக்கீடு: அருண்ஷோரி பதவிக்காலத்தில் எந்த தவறும் நடக்கவில்லை- வழக்கை சி.பி.ஐ. கைவிட்டது
புதுடெல்லி, ஜூலை.17-
 
2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு செய்யப்பட்டதில் ரூ.1.76 லட்சம் கோடி ஊழல் நடந்துள்ளதாக மத்திய கணக்கு தணிக்கை துறை குற்றம் சாட்டியது. இதையடுத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது.
 
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடு செய்ததாக தொலைத் தொடர்புத் துறை முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, கனிமொழி எம்.பி., கலைஞர் டிவி முன்னாள் நிர்வாக இயக்குனர் சரத்குமார் உள்பட 14 பேர் கைது செய்யப்பட்டனர்.
 
இதற்கிடையே ஆ.ராசாவுக்கு முன்பு பதவியில் இருந்தவர்கள் காலத்தில் செய்யப்பட்ட ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்து விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. அதை ஏற்று சிபிஐ அதிகாரிகள் 2001-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டு நடைபெற்ற ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பற்றி விசாரணை நடத்தினார்கள்.
 
ஆ.ராசாவுக்கு முன்பு பிரமோத் மகாஜன், அருண் ஷோரி, தயாநிதிமாறன் ஆகியோர் மத்திய தொலைத் தொடர்பு மந்திரிகளாக இருந்துள்ளனர். இவர்களில் பிரமோத் மகாஜன், தயாநிதி மாறன் இருவரும் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடு செய்ததாக சிபிஐ குற்றஞ்சாட்டியது.
 
அதன் பேரில் அவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து 2003, 2004-ம் ஆண்டுகளில் தொலைத் தொடர்புத் துறை மந்திரியாக இருந்த அருண்ஷோரி ஒதுக்கீடு செய்த ஸ்பெக்ட்ரம் பற்றி ஆய்வு செய்யப்பட்டது.
 
அருண்ஷோரி முதலில் வந்தவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் ஸ்பெக்ட்ரம் அலைவரிசைகளை ஒதுக்கீடு செய்திருப்பது தெரியவந்தது. மேலும் அவர் வட கிழக்கு மாநிலங்களுக்கு அதிக முன்னுரிமை கொடுத்திருப்பதும் தெரிந்தது.
 
அவர் பதவி காலத்தில் ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் எந்த ஒரு சிறு தவறும் நடக்கவில்லை என்று கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அருண்ஷோரி மீதான வழக்கை கைவிடுவதாக சி.பி.ஐ. அறிவித்துள்ளது.
 
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரத்தில் பாஜக ஆட்சிக் காலத்தில் நேர்மையாக விதிகள் கடைபிடிக்கப்பட்டதாக சிபிஐ கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

சக மனிதர்களுக்காக இரவு முழுவதும் பிரார்த்தனை நடத்திய நேபாள மக்கள்

நேபாளத்தில் கடந்த 81 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு வரலாறு காணாத நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த கோர ....»

amarprakash160-600.gif