ஒலிம்பிக் போட்டி: லண்டனில் வீரர்கள் குவிந்தனர் 51 கிலோ மீட்டர் தூரத்துக்கு போக்குவரத்து நெருக்கடி || olympic games sports player gather in london 51 km traffic jam
Logo
சென்னை 23-10-2014 (வியாழக்கிழமை)
  • தொடர் கனமழை: காரைக்காலில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
  • பிரதமர் நரேந்திர மோடி இன்று ஸ்ரீநகர் பயணம்
  • கனடா பாராளுமன்றத்தில் தாக்குதல்: ஒபாமா கண்டனம்
ஒலிம்பிக் போட்டி: லண்டனில் வீரர்கள் குவிந்தனர்- 51 கிலோ மீட்டர் தூரத்துக்கு போக்குவரத்து நெருக்கடி
ஒலிம்பிக் போட்டி: லண்டனில் வீரர்கள் குவிந்தனர்- 51 கிலோ மீட்டர் தூரத்துக்கு போக்குவரத்து நெருக்கடி
லண்டன், ஜூலை. 17-
 
உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழா வான ஒலிம்பிக் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வருகிறது. 30-வது ஒலிம்பிக் போட்டி இங்கிலாந்து தலைநகர் லண்டனில் வருகிற 27-ந்தேதி முதல் ஆகஸ்ட் 12-ந்தேதி வரை நடக்கிறது.
 
இந்தப் போட்டியில் 204 நாடுகளில் 10,500 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்ளலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் போட்டிக்காக அனைத்து ஏற்பாடுகளையும் போட்டி அமைப்பு குழு செய்து உள்ளது. போட்டிக்கான மைதானம், தங்குவதற்கான இடம், பாதுகாப்பு உள்பட அனைத்து வசதிகளையும் செய்து இருக்கிறது.
 
போட்டி தொடங்க இன்னும் 10 நாட்கள் உள்ள நிலையில் ஒவ்வொரு நாட்டில் இருந்தும் வீரர், வீராங்கனைகள் லண்டனில் குவிய தொடங்கி விட்டனர். ஆஸ்திரேலியா, ரஷியா, இத்தாலி, சீனா, அமெரிக்க வீரர், வீராங்கனைகள் அதிகாரிகள் லண்டன் சென்றுள்ளனர். இதனால் நேற்று போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. 51 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் நின்றன.
 
வீரர், வீராங்கனைகள் ஒலிம்பிக் கிராமத்துக்கு பஸ்களில் செல்ல 4 முதல் 5 மணி நேரத்துக்கு மேல் ஆனது. வீரர்கள் போக்குவரத்து நெருக்கடியில் மாட்டிக் கொண்டதற்காக விளையாட்டு துறை மந்திரி ராபர்ட்சன் மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - விளையாட்டுச்செய்திகள்

section1

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டி: இலங்கை அணி அறிவிப்பு

14 வரை நடைபெறுகிறது. வரும் அக்டோபர் 30 ஆம் தேதி இந்தியா ஏ அணிக்கு எதிரான ....»

Maalaimalar.gif
Maalaimalar.gif