ஜனாதிபதி தேர்தல்: தி.மு.க. எம்.பி., எம்.எல்.ஏ.க்களுடன் கருணாநிதி ஆலோசனை || president election karunanidhi discuss with dmk mp mla
Logo
சென்னை 31-10-2014 (வெள்ளிக்கிழமை)
ஜனாதிபதி தேர்தல்: தி.மு.க. எம்.பி., எம்.எல்.ஏ.க்களுடன் கருணாநிதி ஆலோசனை
ஜனாதிபதி தேர்தல்: தி.மு.க. எம்.பி., எம்.எல்.ஏ.க்களுடன்
கருணாநிதி ஆலோசனை
சென்னை, ஜூலை. 17-
 
ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளராக பிரணாப் முகர்ஜி போட்டியிடுகிறார். அவருக்கு தி.மு.க. ஆதரவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பது தொடர்பான தி.மு.க. எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று 10.30 மணிக்கு நடந்தது.
 
தி.மு.க. தலைவர் கருணா நிதி தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின், துரை முருகன், துணை பொதுச்செயலாளர் சற்குணபாண்டியன், வி.பி.துரைசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 
கூட்டத்தில் மத்திய மந்திரிகள் மு.க. அழகிரி, பழனிமாணிக்கம், காந்தி செல்வன், ஜெகத்ரட்சகன், நெப்போலியன், எம்.பி.க்கள் டி.கே.எஸ்.இளங்கோவன், திருச்சி சிவா, வசந்தி ஸ்டான்லி, ஜெயதுரை, ஹெலன் டேவிட், செல்வ கணபதி, தங்கவேலு, ஜின்னா, கே.பி.ராமலிங்கம், ஏ.கே.எஸ்.விஜயன், எம்.எல்.ஏ.க்கள் எ.வ.வேலு, ஜெ.அன்பழகன், தங்கம் தென்னரசு, மைதீன்கான், டி.ஆர்.பி.ராஜா, சிவசங்கரன், கே.வி.செழியன், சக்கரபாணி, அனிதா ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.  
 
கூட்டத்தில் ஜனாதிபதி தேர்தலில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் எவ்வாறு வாக்களிக்க வேண்டும் என்பது குறித்து கருணாநிதி ஆலோசனை கூறினார். 11 மணிக்கு கூட்டம் முடிவடைந்தது.
 
பின்னர் கருணாநிதி நிருபர்களிடம் கூறும்போது, ஜனாதிபதி தேர்தலில் ஏற்கனவே கட்சி சார்பில் விவாதித்து பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவு தருவது என முடிவு செய்யப்பட்டது. அந்த முடிவை நல்ல முறையில் நிறைவேற்றுவதற்கு எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு வழி முறைகள் வழங்கப்பட்டது என்றார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

மோட்சப் பதவியை அடைய 56 நாட்களாக உண்ணாவிரதம் இருந்த ஜைன மூதாட்டி மரணம்

மோட்ச கதியை அடையும் நோக்கில் கடந்த 56 நாட்களாக உண்ணாவிரதம் இருந்த ஜைன மதத்தைச் சேர்ந்த ....»