5 ஒருநாள் போட்டி, ஒரு 20 ஓவர் ஆட்டம்: இந்திய அணி நாளை இலங்கை பயணம் || 5 one day one t20 game india team tomorrow journey to srilanka
Logo
சென்னை 01-09-2015 (செவ்வாய்க்கிழமை)
5 ஒருநாள் போட்டி, ஒரு 20 ஓவர் ஆட்டம்: இந்திய அணி நாளை இலங்கை பயணம்
5 ஒருநாள் போட்டி, ஒரு 20 ஓவர் ஆட்டம்: இந்திய அணி நாளை இலங்கை பயணம்
சென்னை, ஜூலை. 17-
 
டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 5 ஒருநாள் போட்டி மற்றும் ஒரே ஒரு 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது.
 
இலங்கை பயணத்துக்கான இந்திய வீரர்களின் பயிற்சி முகாம் சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று தொடங்கியது. 2-வது நாளாக இன்று பிற்பகலில் இருந்து வீரர்கள் பயிற்சி பெறுவார்கள். இரவு வரை பயிற்சி நடைபெறும். பயிற்சிக்கு பிறகு இந்திய அணி கேப்டன் டோனி நிருபர்களை சந்திக்கிறார்.
 
இந்திய அணி நாளை இலங்கை புறப்பட்டு செல்கிறது. இந்தியா- இலங்கை அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி வருகிற 21-ந்தேதி நடக்கிறது. ஆகஸ்ட் 4-ந்தேதி வரை ஒருநாள் தொடரில் விளையாடும். 20 ஓவர் போட்டி ஆகஸ்ட் 7-ந்தேதி நடைபெறும்.
 
இந்திய அணி 2 ஆண்டுக்கு பிறகு இலங்கை செல்கிறது. கடைசியாக 2010-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்த 3 நாடுகள் போட்டியில் விளையாடியது. 3-வது நாடாக நியூசிலாந்து பங்கேற்றது. இதன் இறுதிப் போட்டியில் இந்திய அணி 74 ரன்னில் இலங்கையிடம் தோற்றது.
 
இரு அணிகளும் கடைசியாக டாக்காவில் மார்ச் மாதம் நடந்த ஆசிய கோப்பை போட்டியில் மோதின. இதில் இந்தியா 50 ரன்னில் வெற்றி பெற்றது. ஆனால் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இந்தியா இழந்தது.
 
ஆசிய கோப்பை போட்டிக்கு பிறகு தற்போதுதான் இந்திய அணி ஒருநாள் போட்டியில் ஆடுகிறது.
 
இலங்கைக்கு எதிரான தொடரில் விளையாடும் இந்திய அணி வருமாறு:-
 
டோனி (கேப்டன்), வீராட் கோலி (துணை கேப்டன்), ஷேவாக், ரகானே, காம்பீர், ரெய்னா, ரோகித்சர்மா, மனோஜ் திவாரி, இர்பான் பதான், அஸ்வின், ஜாகீர்கான், அசோக் திண்டா, ராகுல் சர்மா, ஒஜா, உமேஷ் யாதவ்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
tamil_matrimony_60.gif


O
P
E
N

close

அண்மை - விளையாட்டுச்செய்திகள்

section1

பரபரப்பான கட்டத்தில் 3–வது டெஸ்ட்: இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு

கொழும்பு, செப். 1–இந்தியா – இலங்கை அணிகள் மோதும் 3–வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ....»