இரட்டை சடை போடாமல் வந்ததால் மாணவி தலைமுடியை வெட்டிய ஆசிரியைக்கு 1 மாதம் ஜெயில் || double braided asked coming girl student hair cutting teacher 1 month jail
Logo
சென்னை 03-09-2015 (வியாழக்கிழமை)
  • அசாம் மாநிலத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் 2 பேர் பலி
  • சென்னை விமான நிலையத்தில் கோலாலம்பூரிலிருந்து சென்னை வந்த பயணியிடமிருந்து 2 கிலோ தங்கம் பறிமுதல்
  • கடலூர்: விருதாச்சலத்தில் கார் மீது லாரி மோதியதில் 2 பேர் பலி
  • கீழணை, வீராணம் ஏரியில் இருந்து இன்று தண்ணீர் திறப்பு
இரட்டை சடை போடாமல் வந்ததால் மாணவி தலைமுடியை வெட்டிய ஆசிரியைக்கு 1 மாதம் ஜெயில்
இரட்டை சடை போடாமல் வந்ததால் மாணவி தலைமுடியை வெட்டிய ஆசிரியைக்கு 1 மாதம் ஜெயில்
கோவை, ஜூலை. 17-
 
கோவை சாய்பாபா காலனியை சேர்ந்தவர் வித்யா (வயது 15). பெயர் மாற்றப்பட்டுள்ளது. இவர் கடந்த 2008-ம் ஆண்டு தடாகம் ரோட்டில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்தார். அப்போது வித்யா பள்ளிக்கு இரட்டை சடை அணியாமல் வந்தார்.
 
இதனை விளையாட்டு ஆசிரியை ஷோபனா கண்டுபிடித்து மாணவியை அழைத்து சென்று முட்டி போட வைத்ததோடு தலை முடியையும் வெட்டினார். பள்ளி முடிந்து வீட்டிற்கு புறப்பட்ட வித்யாவால் நடக்க முடியவில்லை.
 
பின்னர் சக மாணவிகள் உதவியுடன் வீட்டிற்கு சென்றார். தனது தாயிடம் நடந்த விபரங்களை கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சாய் பாபா காலனி போலீசில் புகார் செய்தனர். போலீசார் ஆசிரியை ஷோபனா மீது 323 (சிறு காயம் ஏற்படுத்துதல்), 342 (அடைத்து வைத்தல்) ஆகிய பிரிவுகளில் வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.
 
இந்த வழக்கு கோவை 7-வது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் கடந்த 5 ஆண்டுகளாக நடந்து வந்தது. நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அந்த தீர்ப்பில் ஆசிரியை ஷோபனாவிற்கு 1 மாத சிறை தண்டனையும், ரூ. ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஹேமன்குமார் தீர்ப்பு வழங்கினார். மேலும் இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
tamil_matrimony_60.gif


O
P
E
N

close

அண்மை - கோவை