என்ஜினீயரிங் கவுன்சிலிங்: இ.சி.இ., மெக்கானிக்கல்லில் சேர மாணவர்கள் ஆர்வம் || students desire to join ece and mechanical engineering
Logo
சென்னை 26-12-2014 (வெள்ளிக்கிழமை)
  • மதுராந்தகம் தேசிய நெடுஞ்சாலையில் நின்றிருந்த லாரி மீது கார் மோதல்: 3 பேர் பலி
  • கொழும்பிற்கு செல்ல இருந்த சுற்றுலா பயணிகளிடம் போதைப்பொருள்கள் பறிமுதல்: சென்னை விமான நிலையத்தில் 2 பேர் கைது
  • பாக்சிங் டே டெஸ்ட்: ஆஸ்திரேலியா பேட்டிங் ஸ்கோர் 255/5 ஸ்மித் 70•
  • ஜார்கண்டில் பா.ஜ.க.வின் ரகுபர் தாஸ் ஆட்சியமைக்கிறார்: இன்று நடக்கும் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முடிவு
  • ராமேஸ்வரம் மீனவர்களின் வேலைநிறுத்த போராட்டம் வாபஸ்
  • டெல்லி சென்றார் முதல்வர் பன்னீர்செல்வம்: நிதியமைச்சர் ஜெட்லியை சந்திக்கிறார்
என்ஜினீயரிங் கவுன்சிலிங்: இ.சி.இ., மெக்கானிக்கல்லில் சேர மாணவர்கள் ஆர்வம்
என்ஜினீயரிங் கவுன்சிலிங்: இ.சி.இ., மெக்கானிக்கல்லில் சேர மாணவர்கள் ஆர்வம்
சென்னை, ஜூலை.17-
 
சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் பி.இ, பி.டெக், தொழில் படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. வழக்கம் போல இந்த ஆண்டும் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் (இ.சி.இ) பாடப்பிரிவு முதலிடத்தில் உள்ளது.
 
அதையடுத்து மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவுகளையே மாணவர்கள் அதிகம் தேர்வு செய்தனர். நேற்றைய நிலவரப்படி இ.சி.இ. படிப்பை 1897 பேரும், மெக்கானிக்கல் பிரிவை 1488 பேரும், கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவை 1102 பேரும் தேர்வு செய்துள்ளனர்.
 
அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களிடம் இந்த மூன்று துறைகளிலும் சேரும் ஆர்வம் மிக அதிகமாக உள்ளது. இதையடுத்து 4-வது இடத்தில் எலக்டரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் பிரிவு உள்ளது. இந்த பிரிவை 563 மாணவர்களும், சிவில் பிரிவை 562 மாணவர்களும் தேர்வு செய்துள்ளனர் என்று பொறியியல் சேர்க்கை செயலாளர் ரைமண்ட் உத்திரிய ராஜ் கூறினார்.
 
எம்.பி.பி.எஸ். சீட் கிடைத்த 2 மாணவர்கள் அதில் சேராமல் பொறியியல் கல்லூரியை தேர்வு செய்தனர். அவர்களுடன் எம்.பி.பி.எஸ். படிப்பை உதறியவர்களின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்தது.
 
இதுவரை 4 நாட்கள் நடந்த கலந்தாய்வில் 2824 பேருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டன. 699 பேர் கலந்தாய்விற்கு வரவில்லை. 21 பேர் கவுன்சிலிங்கில் பாஸ் பெற்ற எந்த இடத்தையும் தேர்வு செய்யவில்லை. தகவல் தொழில் நுட்பம், சிவில் பாடப்பிரிவுகளை தேர்வு செய்வதில் மாணவர்கள் ஆர்வம் காட்டவில்லை.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

சந்திரபாபு நாயுடு சொந்த வீட்டை காலி செய்து வாடகை வீட்டில் குடியேறுகிறார்

நகரி, டிச. 26–ஆந்திர முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடு வாஸ்து மீது அதிக நம்பிக்கை கொண்டு உள்ளார்.முன்பெல்லாம் ....»