சிரியாவில் கலவரம்: 80 பேரை ராணுவம் சுட்டுக் கொன்றது || syria riot army shot killed 80 person
Logo
சென்னை 10-07-2014 (வியாழக்கிழமை)
  • பட்ஜெட் அறிவிப்பை தொடர்ந்து பங்குசந்தையில் வீழ்ச்சி
  • நீர்பாசன வசதியை அதிகரிக்க ரூ. 1000 கோடி நிதி
  • பெண்களை பாதுகாப்புக்கு ரூ. 150 கோடி ஒதுக்கீடு
  • 16 புதிய துறைமுகங்கள் அமைக்க திட்டம்
  • விவசாயிகளுக்கு தனிதொலைக்காட்சி சேனல்
  • 100 நவீன நகரங்கள் உருவாக்க கூடுதல் நிதி
  • புதிய யூரியா கொள்கை கொண்டு வரப்படும்
  • ஆந்திரா மற்றும் ராஜஸ்தானில் வேளாண் பல்கலைக்கழகம் கொண்டுவரப்படும்
  • ஒரே குடும்பத்தில் 2 வங்கி கணக்கு தொடங்க நடவடிக்கை
  • பெண் குழந்தைகள் நலன் கருதி கல்வி, திருமணத்துக்கு சிறப்பு சேமிப்பு திட்டம்
சிரியாவில் கலவரம்: 80 பேரை ராணுவம் சுட்டுக் கொன்றது
சிரியாவில் கலவரம்: 80 பேரை ராணுவம் சுட்டுக் கொன்றது
டமாஸ்கஸ், ஜூலை. 17-
 
சிரியாவில் அதிபர் பஷர்அல்- ஆசாத்துக்கு எதிராக கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதைத்தொடர்ந்து சுமார் 15 ஆயிரம் பேர் ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
 
கலவரத்தை முடிவுக்கு கொண்டுவர ஐ.நா. எடுத்து வரும் முயற்சி பலனளிக்கவில்லை. தொடர்ந்து கலவரம் தீவிரம் அடைந்துள்ளது. இந்த நிலையில் தனு நகர் டமாஸ்கசில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது ராணுவம் கடுமையாக தாக்கியது.
 
பதிலுக்கு போராட்டக் காரர்களும் ராணுவம் மீது துப்பாக்கியால் சுட்டும், வெடிகுண்டுகளை வீசியும் தாக்கினார்கள். டமாஸ்கஸ் அருகேயுள்ள ததாமன் நகரிலும் கடும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் சுமார் 80 பேர் ராணுவத்தினரால் கொல்லப்பட்டனர். இப்பகுதிகளில் 48 மணி நேரம் தொடர் தாக்குதல் ராணுவம் ஈடுபட்டதாக அரசு ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.
 
தாக்குதலில் காயம் அடைந்தவர்கள் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, இப்பகுதியில் ஒரு புறம் ஆம்புலன்ஸ் சத்தமும், மறுபுறம் துப்பாக்கியால் சுடும் சத்தமும் கேட்டுக் கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் அதிபர் ஆசாத்தின் ராணுவம் போராட்டக்காரர்கள் மீது ரசாயன குண்டுகளை வீச தயார் நிலையில் இருப்பதாக மூத்த அரசியல்வாதிகள் தெரிவித்துள்ளனர்.
 
ஏற்கனவே போராட்டக்காரர்கள் மீது ரசாயன குண்டு வீசி ஏராளமானவர்களை கொன்று குவித்ததாக ஈராக் முன்னாள் தூதர் நவாப் பரேல் குற்றம் சாட்டியுள்ளார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

வியாசர்பாடி–மூலக்கடை மேம்பாலம் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது: அமைச்சர் தகவல்

சென்னை, ஜூலை. 10–சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது உறுப்பினர்கள் கேள்விகளுக்கு அமைச்சர்கள் அளித்த பதில்கள் வருமாறு:–சவுந்தர்ராஜன் ....»