அசாம் பெண் மானபங்கம்: முக்கிய குற்றவாளி ஒடிசாவில் பதுங்கல் இதுவரை 11 பேர் கைது || assam girl morestation important accused abduct in orissa
Logo
சென்னை 01-03-2015 (ஞாயிற்றுக்கிழமை)
அசாம் பெண் மானபங்கம்: முக்கிய குற்றவாளி ஒடிசாவில் பதுங்கல்- இதுவரை 11 பேர் கைது
அசாம் பெண் மானபங்கம்: முக்கிய குற்றவாளி ஒடிசாவில் பதுங்கல்- இதுவரை 11 பேர் கைது
கவுகாத்தி, ஜூலை. 17-
 
அசாம் மாநிலம் கவுகாத்தியில் கடந்த 9-ந்தேதி இளம்பெண் ஒருவர் 16 பேர் கொண்ட போதை கும்பலால் மானபங்கம் செய்யப்பட்டார். இது தொடர்பாக மத்திய- மாநில அரசுகள் விசாரணை நடத்தி வருகின்றன.
 
இளம்பெண்ணை மானபங்கம் செய்தவர்களைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் இதுவரை 11 பேரை கைது செய்துள்ளனர். நேற்று ஒரே நாளில் 5 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய 16 குற்றவாளிகளின் படங்களும் கவுகாத்தி முழுக்க ஒட்டப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
 
16 குற்றவாளிகளில் அமர்ஜோதி என்பவன்தான் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படுகிறான். இவன்தான் அந்த போதை கும்பலுக்கு தலைவனாக செயல்பட்டான்.
 
இளம்பெண்ணை மானபங்கம் செய்தபோது இவன் சிவப்பு கலரில் ஜெர்சி அணிந்திருந்தான். இவனது புகைப்படம் கவுகாத்தி நகரின் முக்கிய இடங்களில் வைக்கப்பட்டு, இவனைப் பற்றி தகவல் கொடுத்தால் பரிசு தரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில் அமர் ஜோதி ஒடிசா மாநிலத்துக்குள் தப்பி ஓடி விட்டதாக தெரிய வந்துள்ளது. அங்குள்ள ஒரு நண்பர் வீட்டில் அவன் பதுங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
 
இதையடுத்து அவனைப் பிடிக்க தனிப்படை போலீசார் ஒடிசாவுக்கு விரைந்துள்ளனர். இதுபற்றி அசாம் முதல்-மந்திரி தருண் கோகாய் கூறுகையில், இளம்பெண் மானபங்கம் விவகாரத்தில் எந்த ஒரு குற்றவாளியையும் தப்பிக்க விடமாட்டோம். எல் லாருக்கும் நிச்சயம் தண்டனை வாங்கிக் கொடுப்போம் என்றார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தேசியச்செய்திகள்

section1

பெங்களூரில் பிரபல நிறுவனங்களின் பெயரில் போலி ஆயத்த ஆடைகள் தயாரித்து விற்ற 2 பேர் கைது

பெங்களூரில் பிரபல நிறுவனங்களின் பெயரில் போலி ஆயத்த ஆடைகள் தயாரித்து விற்கப்படுவதாக குற்றப்பிரிவு போலீசாருக்கு பல்வேறு புகார்கள் ....»

amarprakash160600.gif
amarprakash160600.gif