5 மாதங்களுக்கு முன்னரே பாக். பாராளுமன்றத்துக்கு தேர்தல்: புதிய தகவல் || pak election to be held 5 months before
Logo
சென்னை 30-11-2015 (திங்கட்கிழமை)
5 மாதங்களுக்கு முன்னரே பாக். பாராளுமன்றத்துக்கு தேர்தல்: புதிய தகவல்
5 மாதங்களுக்கு முன்னரே பாக். பாராளுமன்றத்துக்கு தேர்தல்: புதிய தகவல்
இஸ்லாமாபாத், ஜூலை 17-

பாகிஸ்தான் பாராளுமன்றத்துக்கு 5 மாதங்களுக்கு முன் கூட்டியே நவம்பர் மாதம் முதல் வாரத்தில் தேர்தல் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை சுதந்திர தினத்தன்று பிரதமர் அஷரப் அதிகாரபூர்வமாக அறிவிப்பார் என தெரிகிறது.

பாகிஸ்தானில் அதிபர் சர்தாரியின் தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி கூட்டணியின் ஆட்சி நடந்து வருகிறது. தற்போது பிரதமராக ராஜா பர்வேஸ் அஷரப் இருக்கிறார். இந்த ஆட்சியில் ஊழல் மலிந்து கிடக்கிறது என்றும், நிர்வாக திறமை இல்லை என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இதனை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களையும் நடத்தி வருகின்றன.

இதற்கிடையில் அதிபர் சர்தாரி மீதான புகாரில் சுவிட்சர்லாந்து வங்கி அதிகாரிகளுக்கு கடிதம் எழுதும்படி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதை செயல்படுத்த மறுத்ததால் கிலானியின் பிரதமர் பதவி பறிக்கப்பட்டது. இவருக்கு அடுத்து பிரதமரான அஷரப்புக்கும் இந்த வழக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. வருகிற 25-ந் தேதி வரையில் சுப்ரீம் கோர்ட்டு கெடு விதித்து இருக்கிறது. இதனால் பாகிஸ்தான் அரசுக்கு கடும் நெருக்கடி உருவாகி இருக்கிறது.

பாகிஸ்தான் பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு (2013) மார்ச் மாதம் தேர்தல் நடைபெற வேண்டும். ஆனால் தற்போதுள்ள நெருக்கடியில் இருந்து மீள முன் கூட்டியே இந்த ஆண்டு இறுதிக்குள் பாராளுமன்ற தேர்தலை நடத்த ஆளுங்கட்சி தீர்மானித்து அதில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. முன்னாள் பிரதமர் நவாஷ் செரீப் தலைமையிலான முக்கிய எதிர்க்கட்சியான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியுடன் பேச்சு நடத்துவதாவும், அதில் இடைக்கால பிரதமராக பிரபல வக்கீல் அஸ்மா ஜகாங்கீரை நியமிப்பது பற்றி ஆலோசிக்கப்பட்டதாகவும் ஒரு தகவல் வெளிவந்தது.

இதற்கிடையில் பாகிஸ்தான் பாராளுமன்றத்துக்கு நவம்பர் மாதம் தேர்தல் நடைபெறலாம் என்று டான் செய்தி நிறுவனம் கூறியிருக்கிறது. மேலும் அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சி மற்றும் முக்கிய எதிர்க்கட்சியான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி இடையே நேற்று முன்தினம் பேச்சுவார்த்தை நடந்தது. அதில் பொதுத்தேர்தலை நடத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் நவம்பர் முதல் வாரத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளது. இதனை பாகிஸ்தானின் சுதந்திர தினமான ஆகஸ்டு 14-ந் தேதி பிரதமர் ராஜா பர்வேஸ் அஷரப் அதிகாரபூர்வமாக அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் இடைக்கால அரசாங்கம் அமைப்பது குறித்தும் இரு கட்சிகள் இடையே உடன்பாடு ஏற்பட்டது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் சரியாக இருக்குமானால் அங்கு 5 மாதங்களுக்கு முன்பே தேர்தல் வந்து விடும்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Newbharath.gif


O
P
E
N

close

அண்மை - உலகச்செய்திகள்

section1

பாரிசில் மோடியுடன் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் சந்திப்பு

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் பருவகால மாற்றம் தொடர்பான விழிப்புணர்வு மாநாடு நடக்கிறது. உலக அளவில் எடுக்க ....»

AadidravidarMatrimony_300x100px_28-10-15-3.gif