துணை கேப்டன் பதவி பறிபோனதை பொருட்படுத்தவில்லை: கம்பீர் பேட்டி || no bother about vice captainship gambir
Logo
சென்னை 03-03-2015 (செவ்வாய்க்கிழமை)
துணை கேப்டன் பதவி பறிபோனதை பொருட்படுத்தவில்லை: கம்பீர் பேட்டி
துணை கேப்டன் பதவி பறிபோனதை பொருட்படுத்தவில்லை: கம்பீர் பேட்டி
சென்னை, ஜூலை 17-

டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 5 ஒருநாள் போட்டி மற்றும் ஒரே ஒரு 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது. இரு அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி வருகிற 21-ந் தேதியும், 2-வது ஒருநாள் போட்டி 24-ந் தேதியும், 3-வது ஒருநாள் போட்டி 28-ந் தேதியும், 4-வது ஒருநாள் போட்டி 31-ந் தேதியும், 5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ஆகஸ்டு 4-ந் தேதியும், 20 ஓவர் போட்டி ஆகஸ்டு 7-ந் தேதியும் நடக்கிறது.

இலங்கை அணிக்கு எதிரான தொடருக்கான இந்திய அணி பயிற்சி முகாம் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நேற்று பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கியது. கேப்டன் டோனி, துணை கேப்டன் விராட் கோக்லி, கவுதம் கம்பீர், ஜாகீர்கான் உள்பட 15 வீரர்களும் பயிற்சியில் ஈடுபட்டனர். இரவு 7.30 மணி வரை பயிற்சி முகாம் நடந்தது. இன்றும் இந்திய அணி வீரர்கள் சென்னையில் வலைப்பயிற்சியில் ஈடுபடுகிறார்கள்.

நாளை மதியம் இந்திய அணி இலங்கை புறப்பட்டு செல்கிறது. நேற்றைய பயிற்சி முடிந்ததும் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் கவுதம் கம்பீர் அளித்த பேட்டியில்:

அணியின் துணை கேப்டன் பதவி பறிபோனது குறித்து நான் பொருட்படுத்தவில்லை. எனது நாட்டுக்காக, அணிக்காக முழு திறமையும் வெளிப்படுத்தி ஆடுவது தான் எனது பணியாகும். அணியின் வெற்றி கேப்டனுக்கு மட்டுமல்லாமல் அணியில் உள்ள எல்லோருக்கும் சாரும். சொந்த மண்ணில் இலங்கை அணி வலுவானதாகும். பாகிஸ்தான் மட்டுமின்றி எந்த நாட்டு அணியுடனும் விளையாடுவதும் எங்களுக்கு ஒன்று தான் என்றார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - விளையாட்டுச்செய்திகள்

section1

ஒருநாள் கிரிக்கெட் பேட்டிங் தர வரிசை: டிவில்லியர்ஸ் தொடர்ந்து முதலிடம்

ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் அடிப்படையில் வீரர்களில் தர வரிசைப்பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று வெளியிட்டுள்ளது. இதன்படி ....»

amarprakash160600.gif
amarprakash160600.gif