இலங்கை ராணுவத்தினருக்கு இந்தியாவில் பயிற்சி அளிப்பதை ஏற்க முடியாது: கருணாநிதி அறிக்கை || Sri Lankan army not accept for training in India karunanidhi announced
Logo
சென்னை 01-12-2015 (செவ்வாய்க்கிழமை)
இலங்கை ராணுவத்தினருக்கு இந்தியாவில் பயிற்சி அளிப்பதை ஏற்க முடியாது: கருணாநிதி அறிக்கை
இலங்கை ராணுவத்தினருக்கு இந்தியாவில் பயிற்சி அளிப்பதை ஏற்க முடியாது: கருணாநிதி அறிக்கை
சென்னை, ஜுலை.17-
 
குன்னூரில் உள்ள ராணுவப் பயிற்சி கல்லூரியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுவதாகவும், அதில் வியட்னாம், நைஜீரியா, பங்களாதேஷ், பிரிட்டன் உள்ளிட்ட 10 நாடுகளை சேர்ந்த 25 ராணுவ அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர் என்றும், அதிலே இரண்டு இலங்கை ராணுவ அதிகாரிகளும் இருப்பதாகவும் பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது.
 
இலங்கை ராணுவத்தினர் தொடர்ந்து ஈழத்தமிழர்களைத் தாக்கிக் கொடுமைப்படுத்தி வரும் நிலையில், அந்த இலங்கை ராணுவத்தினருக்கு இந்தியாவில் பயிற்சியளிப்பதை ஏற்றுக்கொள்ள இயலாது. இது உண்மையாக இருக்குமேயானால், மத்திய அரசு உடனடியாக அவர்களைத் திருப்பி அனுப்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
 
மேலும் தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் மத்திய அரசு ஈடுபட்டு தமிழர்களின் மனதைப் புண்படுத்தும் செயலைத் தவிர்ப்பது நல்லது என்பதே என் கருத்தாகும்.
 
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Newbharath.gif


O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

மத்திய அரசு ஊழியர்களையும் விசாரிக்கும் அதிகாரத்துடன் ஜன்லோக்பால் சட்டம்: டெல்லி சட்டசபையில் தாக்கல்

டெல்லி மாநில துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியா நேற்று ஜன்லோக்பால் சட்டமசோதாவை அறிமுகப்படுத்தினார். அந்த மசோதாவில் ....»

AadidravidarMatrimony_300x100px_28-10-15-3.gif