இந்தியாவில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் டெல்லியில்தான் அதிகம்: ஆய்வில் தகவல் || more Crimes against child in Delhi among India
Logo
சென்னை 31-05-2015 (ஞாயிற்றுக்கிழமை)
இந்தியாவில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் டெல்லியில்தான் அதிகம்: ஆய்வில் தகவல்
இந்தியாவில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் டெல்லியில்தான் அதிகம்: ஆய்வில் தகவல்
புதுடெல்லி,ஜுலை.17-
 
தேசிய அளவில் கடந்த 2011-ம் ஆண்டு, குழந்தைகளுக்கு எதிராக மொத்தம் 33 ஆயிரத்து 98 குற்ற சம்பவங்கள் நடைபெற்று உள்ளன. இது முந்தைய 2010-ம் ஆண்டைக் காட்டிலும் 24 சதவீதம் (26,694) அதிகம் ஆகும். இதில் டெல்லியில் தான் அதிக எண்ணிக்கையில் 25.4 சதவீத குற்ற சம்பவங்கள் நடைபெற்று உள்ளன.
 
அதற்கு அடுத்த இடத்தை அந்தமான் நிகோபர் தீவுகள் (20.3 சதவீதம்) பிடித்து உள்ளது. அதேபோன்று, முந்தைய ஆண்டில் 1,508 ஆக இருந்த குழந்தைகள் கொலை மற்றும் சிசுக்கொலை குற்றங்கள், 2011-ம் வருடத்தில் 1,514 ஆக அதிகரித்து உள்ளது. அதில், 326 சம்பவங்களுடன் உத்தரபிரதேச மாநிலம் முதல் இடத்தை பிடித்து உள்ளது. இது தேசிய அளவில் 22.9 சதவீதம் ஆகும்.
 
அதேநேரத்தில், அருணாச்சல பிரதேசம், மிசோராம், டாமன் மற்றும் டையூ, லட்சத்தீவுகள் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் எந்தவிதமான குழந்தை கொலை மற்றும் சிசுக்கொலை சம்பவங்களும் நடைபெற்றதாக தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. தேசிய அளவில் கடந்த 2010-ம் ஆண்டில் 5,484 ஆக இருந்த குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், 2011-ம் ஆண்டில் 29.7 சதவீதம் அதிகரித்து 7,112 ஆக உயர்ந்து உள்ளது.
 
இதில், மத்திய பிரதேச மாநிலம் (1,262) முதல் இடத்தையும், உத்தரபிரதேசம் (1,088), மராட்டியம் (818) மாநிலங்கள் முறையே 2-வது மற்றும் 3-வது இடங்களையும் பிடித்து உள்ளன. நாட்டில் நடந்துள்ள குழந்தைகளுக்கு எதிரான மொத்த பாலியல் குற்றங்களில் 44.5 சதவீதத்தை மேற்கண்ட 3 மாநிலங்களுமே பிடித்து உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

கொளுத்தும் வெயிலுக்கு மேலும் 202 பேர் பலி: நாடு முழுவதும் பலியானவர்கள் எண்ணிக்கை 2207 ஆக உயர்வு

கோடை வெயில் கடுமையாக கொளுத்தி வரும் நிலையில் ஆந்திர பிரதேசம், தெலுங்கானா மற்றும் ஒடிசா மாநிலங்களில் ....»

MM-TRC-Set2-B.gif