மீண்டும் நியூசிலாந்தை வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ்: சுனில் நரைன் அபாரம் || WI beat NZ again
Logo
சென்னை 24-09-2014 (புதன்கிழமை)
  • சென்னை விமான நிலையத்தில் ரூ. 3 கோடி மதிப்புள்ள 10 கிலோ தங்கம் பறிமுதல்
  • செவ்வாய் சுற்றுப்பாதையில் மங்கள்யானை நிலைநிறுத்தும் பணி தொடங்கியது
  • தூத்துக்குடி: பிளாஸ்டிக் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் 2 தொழிலாளர்கள் பலி
மீண்டும் நியூசிலாந்தை வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ்: சுனில் நரைன் அபாரம்
மீண்டும் நியூசிலாந்தை வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ்: சுனில் நரைன் அபாரம்
செயிண்ட் கிட்ஸ்,ஜூலை.17-
 
நியூசிலாந்து கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கிடையே நடந்த 20 ஓவர் தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணி கைப்பற்றியிருந்தது.
 
5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் முதல் நான்கு ஆட்டங்களின் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 3-1 என்ற கணக்கில் தொடரை வென்றது.   இந்நிலையில் 5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி செயிண்ட் கிட்ஸ் நகரிலுள்ள வார்னர் பார்க் மைதானத்தில் இன்று நடந்தது.
 
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 241 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் ரசல் 40 பந்துகளில் 59 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவருக்கு அடுத்தபடியாக பிராவோ 53 ரன்கள் எடுத்தார்.  
 
இதன்பின்னர் 242 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய நியூசிலாந்து அணி துவக்கத்திலிருந்தே சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்தது. அந்த அணியின் வில்லியம்சன் (68 ரன்கள்) தவிர யாரும் சிறப்பாக ஆடாததால் நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 221 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. வெஸ்ட் இண்டீஸ் வீரர் சுனில் நரைன் 27 ரன்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
 
இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஆட்டநாயகன் மற்றும் தொடர்நாயகன் விருதுகள் சுனில் நரைனுக்கு வழங்கப்பட்டன.
 
இரு அணிகளுக்கிடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆன்டிகுவாவில் வரும் 25-ம் தேதி துவங்குகிறது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

தீவிரவாத வழக்கில் பின்லேடன் மருமகனுக்கு ஆயுள் தண்டனை: சொத்துகளும் பறிமுதல்

உலகையே அச்சுறுத்தி வந்த அல்கொய்தா தீவிரவாதிகள் 11-9-2001 அன்று அமெரிக்காவை பழிவாங்க 4 விமானங்களை கடத்தினர். ....»