இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட்டிற்கு விஸ்வ ஹிந்து பரிஷத் எதிர்ப்பு || VHP opposes proposed Indo Pak series asks players to opt out
Logo
சென்னை 02-07-2015 (வியாழக்கிழமை)
இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட்டிற்கு விஸ்வ ஹிந்து பரிஷத் எதிர்ப்பு
இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட்டிற்கு விஸ்வ ஹிந்து பரிஷத் எதிர்ப்பு
அலகாபாத்,ஜூலை.16-
 
மும்பை தாக்குதலுக்குப் பிறகு முதல் முறையாக டிசம்பர் மாதம் இந்தியா வரும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, 3 ஒருநாள் போட்டி மற்றும் இரண்டு இருபது ஓவர் போட்டிகளில் விளையாட உள்ளது. இதற்கான அறிவிப்பை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இன்று வெளியிட்டது. பிசிசிஐ-ன் இந்த அறிவிப்பிற்கு விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் கிரிக்கெட் வாரியம் சமரசம் செய்து கொண்டுள்ளதாகவும் விஸ்வ ஹிந்து பரிஷத் குற்றம் சாட்டியுள்ளது.
 
இதுபற்றி பேசிய விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் பிரவீண் தொகாடியா, '5 வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் தொடருக்காக வழங்கப்பட்ட சிறப்பு விசாக்கள் மூலம் பாகிஸ்தானியர்கள் நிறைய பேர் இந்தியாவிற்குள் நுழைந்ததாக டெல்லி போலீசாரால் சமீபத்தில் கைது செய்யப்பட்ட தீவிரவாதி அபு ஜிண்டால் வாக்குமூலம் அளித்துள்ளான். அவ்வாறு வந்தவர்கள் இங்கேயே தங்கி, தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் சமரசம் செய்து கொண்டு, இந்த முடிவை எடுத்த கிரிக்கெட் வாரியமும், மத்திய அரசும் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்றார். 
 
மேலும் நாட்டுப்பற்று கொண்ட இந்திய கிரிக்கெட் வீரர்கள் பாகிஸ்தானுடன் கிரிக்கெட் ஆட மறுப்பு தெரிவிக்க வேண்டுமெனவும் தொகாடியா கேட்டுக் கொண்டுள்ளார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

உடன்குடி அனல்மின் நிலைய புதிய ஒப்பந்தப்புள்ளிக்கு தடை: சீன நிறுவனம் தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட்டு உத்தரவு

உடன்குடி அனல்மின் நிலையம் அமைப்பதற்கான டெண்டர் மீது நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான ....»