பாகிஸ்தான்: பாதுகாப்பு அலுவலகத்தை தாக்கி பலரை சிறைபிடித்த தலிபான் தீவிரவாதிகள் கைது || Taliban attack in Pakistan
Logo
சென்னை 01-09-2014 (திங்கட்கிழமை)
  • விழுப்புரம்: செஞ்சி அருகே ஆசிரியர் வீட்டில் 80 சவரன் நகை கொள்ளை
  • ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபேவுடன் பிரதமர் மோடி இன்று அதிகாரப்பூர்வ சந்திப்பு
  • பெட்ரோல் விலையை தொடர்ந்து டீசல் விலையும் குறைக்கப்படும்: ராஜ்நாத் சிங்
  • முல்லை பெரியாறு அணையில் ஆய்வு நடத்த 5 பேர் குழு புறப்பட்டது
  • இன்று முதல் 21 சுங்கச்சாவடிகளில் 15 சதவீதம் கட்டணம் உயர்வு
  • மவுலிவாக்கம் கட்டட விபத்து: மத்திய, மாநில அரசுகள் விளக்கம் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
  • தாத்ரா வாகன ஒப்பந்தம்: தேஜிந்தர் சிங் ஜாமின் மனு தள்ளுபடி-கைது
  • ஐ.பி.எல். சூதாட்ட வழக்கை 2 மாதங்களில் முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
பாகிஸ்தான்: பாதுகாப்பு அலுவலகத்தை தாக்கி பலரை சிறைபிடித்த தலிபான் தீவிரவாதிகள் கைது
பாகிஸ்தான்: பாதுகாப்பு அலுவலகத்தை தாக்கி பலரை சிறைபிடித்த தலிபான் தீவிரவாதிகள் கைது
பன்னு,ஜூலை.16-
 
பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் ஆப்கன் எல்லைப்பகுதியிலுள்ள பன்னு என்னுமிடம் தலிபான் தீவிரவாதிகளின் மறைவிடமாக கூறப்படுகிறது. இந்த பழங்குடியினர் பகுதிக்கு மாறுவேடத்தில் வந்த பாகிஸ்தானை சேர்ந்த தலிபான் தீவிரவாதிகள் அப்பகுதியில் அமைந்துள்ள பாதுகாப்பு புலனாய்வு அலுவலகத்தை தாக்கியுள்ளனர்.
 
பிறகு அங்கிருந்த சிலரை சிறைக்கைதியாக பிடித்த தீவிரவாதிகள், அவர்களை அந்த அலுவலகத்திலே சிறைவைத்தனர். செய்தியறிந்த காவல்துறையினர் உடனடியாக அந்த அலுவலகத்தை சுற்றி வளைத்து தாக்கியுள்ளனர்.
 
தீவிரவாதிகளுடன் ஐந்து மணி நேரம் கடுமையாக நடைபெற்ற இந்த சண்டைக்கு பிறகு பிணைகைதிகள் அனைவரும் மீட்கப்பட்டனர். இந்த சண்டையில் காவலர் ஒருவர் இறந்துவிட்டதாகவும் பலர் கயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. தீவிரவாதிகளில் இருவர் பிடிபட்டதாகவும், இருவர் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும், கூறப்படுகிறது.
 
இவர்கள் அனைவரும் பாகிஸ்தானை சேர்ந்த தலிபான் தீவிரவாதிகள் என்றும் சொல்லப்படுகிறது. மலைப்பிரதேசமான இந்த பன்னு பகுதியில் அடிக்கடி  தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். மேலும் சமீபத்தில் இங்குள்ள ஒரு சிறைச்சாலையை தகர்த்த தீவிரவாதிகள் 400 க்கும் மேற்ப்பட்ட தீவிரவாதிகளை விடுவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

தாத்ரா வாகன ஒப்பந்தம்: தேஜிந்தர் சிங் ஜாமின் மனு தள்ளுபடி-கைது

தாத்ரா வாகன ஒப்பந்தம் தொடர்பான வழக்கில் தேஜிந்தர் சிங்கின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதுடன், அவர் ....»

300x100.jpg