உடல் நிலையில் முன்னேற்றம்: முபாரக் மீண்டும் சிறைக்கு அனுப்பப்பட்டார் || Egypt Mubarak to be sent back to prison
Logo
சென்னை 03-09-2014 (புதன்கிழமை)
  • உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக தத்து நியமனம்
  • சென்னையில் கருணாநிதி தலைமையில் இன்று டெசோ ஆர்ப்பாட்டம்
  • ராமேசுவரம் மீனவர்கள் 3-வது நாளாக உண்ணாவிரத போராட்டம்
உடல் நிலையில் முன்னேற்றம்: முபாரக் மீண்டும் சிறைக்கு அனுப்பப்பட்டார்
உடல் நிலையில் முன்னேற்றம்: முபாரக் மீண்டும் சிறைக்கு அனுப்பப்பட்டார்
கெய்ரோ, ஜூலை 16-

எகிப்தில் வறுமை, வேலைவாய்ப்பின்மை அதிகரித்ததால் பொதுமக்கள் நாடு முழுவதும் அதிபர் ஹோஸ்னி முபாரக்கை பதவி விலக வலியுறுத்தி கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.

அவர்களை ராணுவத்தின் உதவியுடன் ஒடுக்க முற்பட்டார் முபாரக். இந்த அடக்குமுறைகளில் ஏராளமானோரை கொன்று குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் முபாரக்கிற்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

84 வயதான முபாரக், பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு, டோராவில் உள்ள சிறைத்துறை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு உடல் நிலை மோசமடைந்ததால் ஜூன் 19ம் தேதி ராணுவ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அப்போது அவர் இறந்துவிட்டதாக செய்தி பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தற்போது முபாரக்கின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து மீண்டும் டோரா சிறை மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - உலகச்செய்திகள்

section1

கீவ் நகரை கைப்பற்றுவதாக கூறினாரா?: ரஷிய அதிபர் கருத்தால் சர்ச்சை

உள்நாட்டுப்போர் நடந்து வருகிற உக்ரைனில் ரஷியா நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டு வருவதாக அந்த நாட்டின் அதிபர் ....»