நெசவாளர்களுக்கு ஓய்வூதியம் ரூ.1,350 ஆக உயர்வு || Weavers pensions rises to Rs 1350
Logo
சென்னை 07-10-2015 (புதன்கிழமை)
நெசவாளர்களுக்கு ஓய்வூதியம் ரூ.1,350 ஆக உயர்வு
நெசவாளர்களுக்கு ஓய்வூதியம் ரூ.1,350 ஆக உயர்வு
புதுச்சேரி, ஜூலை.16-
 
புதுவை பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது:-
 
புதுவை கூட்டுறவு சர்க்கரை ஆலையின் உற்பத்தியை அதிகரிக்கவும், நவீனப்படுத்தவும், புதுவை மற்றும் காரைக்காலில் உள்ள கூட்டுறவு நூற்பாலைகள் திறம்பட செயல்படவும் நிதி உதவி அளிக்கப்படும்.
 
மழைக்காலங்களில் கூட்டுறவு சங்க நெசவாளர்களுக்கு அளிக்கப்படும் உதவித் தொகையை ரூ.2 ஆயிரத்திலிருந்து ரூ.3 ஆயிரமாக உயர்த்த நான் உத்தேசித்துள்ளேன். புதுவையில் பால் தட்டுப்பாடு நிலவுவதால் பால் உற்பத்தியை அதிகரிக்க கூட்டறவு சங்கங்களுக்கு பால் வழங்கும் விவசாயிகளை அரசு ஊக்குவிக்கிறது. கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கங்களின் உறுப்பினர்களுக்கு கால்நடை மற்றும் கன்றுகளுக்கான தீவனம் 75 விழுக்காடு மானிய விலையில் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
 
பழங்குடியினர் இனத்தை சேர்ந்த மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் வகையில் அவர்கள் சிறு கூட்டுறவு பால் பண்ணைகளை அமைக்க உதவும் திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும். தற்போதுள்ள நெசவாளர்களுக்கு அளிக்கப்படும் மாத ஓய்வூதியம் ரூ.1,250 லிருந்து ரூ.1,350 ஆக உயர்த்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
tamil_matrimony_60.gif


O
P
E
N

close

அண்மை - புதுச்சேரி

VanniarMatrimony_300x100px_2.gif